முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

sarveswaran

கல்வித்துறையில் வடமாகாணம் முதலிடம் – சர்வேஸ்வரன்


ஒன்பதாவது இடத்தில் இருந்த வடமாகாண கல்வி தற்போது முதலாவது இடத்தினை பிடித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, வடமாகாணத்தின் கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

“வடமாகாண மாணவர்கள் வெவ்வேறு துறை ரீதியாக முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கின்றார்கள். வடமாகாண கல்வியின் அடைவு மட்டம் தொடர்பாக தற்போது சில முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில், எமது மாணவர்கள் பல்வேறு துறைகளிலும், சர்வதேச ரீதியில் பல பதக்கங்களை பெற்றுள்ளனர். மாகாணத்தின் கல்வி செயற்பாட்டினையும் முன்னேற்றியுள்ளார்கள்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தேசிய ரீதியாக முதலாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையிலான முன்னேற்றத்தினை வடமாகாணம் கண்டுள்ளது. இதேபோன்று, தேசிய விளையாட்டுக்களிலும் முன்னேற்றத்தினைக் கண்டிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் 12 பதக்கங்களைப் பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்த நாம் இப்போது 21 பதக்கங்களைப் பெற்று எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.

ஆசிய இளையோர் எறிபந்து அணியின் சார்பாக இலங்கையில் இருந்து சென்றவர்களில், யூனியன் கல்லூரி மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இந்த ஆண்டு சர்வதேச ரீதியாக பல மாணவர்கள் பங்கு பற்றியுள்ளதுடன், தங்க பதக்கங்களும் பெற்றுள்ளனர்.

இவற்றினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பல
முன்னேற்றத்தினைக் கண்டுள்ளோம். எதிர்வரும் வருடங்களிலும், எமது மாணவர்கள் சாதனைப் படைக்க வேண்டும்.

இதேவேளை, பின்தங்கிய நிலையில் வடமாகாண கல்வி இருப்பதாக யாராலும் கூற முடியாத முன்னேற்றத்தினைப் பெற வேண்டும்.

கடந்த வருடம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த
கல்வித்திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கு தனது நன்றிகளையும்” அமைச்சர் தெரிவித்தார்

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்