முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

fishermen

இலங்கையின் புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம்!!


தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர் படகிற்கு ரூபாய் 17.50 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்தனர். இச்சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், ‘இலங்கை சிறையில் உள்ள 136 மீனவர்கள், 186படகையும் விடுவிக்க வேண்டும், தினமும் டீசல் விலை உயர்வதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே டீசல் விலையை குறைக்க வேண்டும். தமிழக மீனவர்களை அழிக்கும் நோக்கில் இலங்கை அரசு தாக்கல் செய்த புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்ரவரி 16ல் நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் நடத்தும் பாம்பன் தேசிய நெடுஞ்சாலைபாலம் முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்பது, இப்போராட்டத்திற்கு ஆதரவாக இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, இலங்கை வசமுள்ள 186 படகின் உரிமையாளர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசு, சகாயம், எமிரேட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்