முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

hapees

ஹபீஸ் பயங்கரவாதியாக அறிவிப்பு!


மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை, சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, பயங்கரவாதி என, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாக்.,கில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, பாக்., அதிபர், மம்னுான் உசேன், அவசர சட்டம் ஒன்றில், நேற்று கையெழுத்திட்டார். அதன்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட அனைத்து அமைப்புகள், தனிநபர்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட, ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதும், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளான்.

இதையடுத்து, லாகூரில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைமையகம் அருகே, 10 ஆண்டுகளாக இருந்த தடைகளை, போலீசார் நேற்று அகற்றினர். இந்த தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில், ஜமாத் உத் தவா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டவை.

பாக்., உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 26 இடங்களில், பயங்கரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் அருகே அமைக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டு உள்ளதாக, லாகூர், டி.ஐ.ஜி., ஹைதர் அஷ்ரப் கூறினார்.

பாக்.,கில் செயல்படும், 27 பயங்கரவாத அமைப்புகள், ஐ.நா., தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ் தலைநகர், பாரிசில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதிநடவடிக்கை அதிரடி படை கூட்டம், விரைவில் நடக்க உள்ளது.

இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்தால், தவிர்க்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில், பாக்., சேர்க்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.இது, பாக்.,கின், சர்வதேச வர்த்தகத்துக்கு, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அச்சமடைந்துள்ள, பாக்., பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்