முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

atul-sandhu

அமெரிக்க இந்திய தூதுவர்கள் ஜனாதிபதி பிரதமருடன் அவசர சந்திப்பு!!!


இலங்கைக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசின் பங்காளிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதையடுத்து, கொழும்பு அரசியலில் குழப்பங்கள் தோன்றியுள்ளன.

கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை அடைந்துள்ள சூழலில், நேற்று, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள, விஜய் கோகலேயை சந்திப்பதற்காக, புதுடெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் நேற்று ஜனாதிபதியையும், பிரதமரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதில், இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அமெரிக்க, இந்திய தூதுவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்தமை, வழக்கமான சந்திப்புகளே என்று சில தகவல்கள் கூறுகின்றன

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்