
Pathivu | Tamil Win | IBC Tamil | Vakeesam | MaatraM | Tamil Diplomat | PonguThamiL | SamaKalam
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டு மக்கள் ஐதேகவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்காமல், வெறுமனே அமைச்சரவையை மாற்றியமைப்பதில் அர்த்தமில்லை.
கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படாவிடின், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நானே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவேன். அதற்கு கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது” என கூறியுள்ளார்.