முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

1407937352_7154529_hirunews_election

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் – தேர்தல் ஆணைக்குழு


340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட எண்ணாயிரத்து 689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உரிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கட்சியின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்ற கட்சிக்கு உரிய உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர் அல்லது உப தலைவர் பதவிக்கான உறுப்பினர்களை முன்மொழியலாம். எதிர்வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை இந்த நடவடிக்கை இடம்பெறுவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலமும், விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக மேலும் 364 பேர் முன்மொழியப்பட வேண்டும். உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஐயாயிரத்து 75 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 535 பேர் பெண்களாவர்.

இது வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பத்து சதவீதமாகும். எஞ்சிய 15 சதவீதமானோர் பெண் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள். இதற்கமைய, ஆயிரத்து 300 பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்