முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

Rajinder-yaalaruvi

தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு – டி.ராஜேந்தர்!


தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப் போவதாக நடிகரும் லட்சிய தி.மு.க நிறுவனருமான டி.ராஜேந்தர் இன்று தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும் அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

அதேபோல் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டி.ராஜேந்தர் திருச்சியில் இன்று அளித்துள்ள பேட்டியில்

“தமிழக மக்களை காக்க நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு வருகிறேனோ! இல்லையோ! எனது முடிவில் இருக்காது தடுமாற்றம். மக்கள் சக்தியை எப்படி திசை திருப்பவேண்டும் என்ற யுக்தி எனக்கு தெரியும். 3 நாட்களில் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆக நினைக்கிறார்கள். எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன் பேசுவார்” எனக் கூறியுள்ளார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்