முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

stalin

தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!


‘பூத் கமிட்டிக்கு, போலி உறுப்பினர்களை சேர்த்தால், நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.

சென்னை, அறிவாலயத்தில், மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில், ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

தொகுதிகளில் உள்ள, பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யும், 20 நபர்களில், ஐந்து மகளிர் இடம்பெற வேண்டும். அனைவரும் வாக்காளர்கள் அட்டை வைத்திருக்க வேண்டும். கட்சி விசுவாசிகள் மட்டுமே, இதில் இடம் பெற வேண்டும்.

போலி உறுப்பினர்களை சேர்க்கக் கூடாது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, அங்குள்ள ஒரு பூத் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட, 24 உறுப்பினர்களில், தி.மு.க.,வுக்கு, 11 வாக்குகள் தான் கிடைத்துள்ளன. மற்ற உறுப்பினர்கள் விலை போய்விட்டனர்.பூத் கமிட்டி உறுப்பினர்கள், விலை போகாதவர்களாக இருக்க வேண்டும். விலை போகும் உறுப்பினர்களையும், போலி உறுப்பினர்களையும் நியமித்தால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.,வில், 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில், தீர்ப்பு வெளி வந்ததும், ஆட்சி கவிழும்; ஆறு மாதங்களில் தேர்தல் வரும். அதில், தி.மு.க., வெற்றி பெறும் என தெரிவித்தார்.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்