முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

knife6

முல்லைத்தீவில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் வவுனியா மருத்துவமனைக்கு மாற்றம்!


முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்­தில் நேற்று முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற மோதல் மற்­றும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் படு­கா­ய­ம­டைந்த 9 பேரில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர். சம்­பத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று தெரி­வித்து பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்ட 16 பேரும் மாவட்ட நீதி­வான் மன்­றி­னால் ஆள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இரு குழுக்­க­ளுக்கு இடை­யில் பெரும் மோதல் இடம்­பெற்­றது. இரவு 7 மணிக்கு ஆரம்­பித்த மோதல் 11 மணி­வரை நீடித்­தி­ருந்­தது. மோதல், வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் இரு குழுக்­க­ளை­யும் சேர்ந்த 9 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­கள் மாஞ்­சோலை மருத்­துவ மனை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அவர்களில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு நேற்று மாற்­றப்­பட்­டுள்­ள­னர். வாள்­வெட்­டுச் சம்­பத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்டு அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த 16 பேர் முள்­ளி­ய­ வ­ளைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

மாவட்ட நீதி­வான் மன்­றில் நேற்று அவர்கள் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். விசா­ணை­களை முன்­னெ­டுத்த மன்று பாட­சாலையில் படிக்­கும் மாண­வர்­கள் நான்­கு­பேரை ஜம்­ப­தா­யி­ரம் ரூபா சரீ­ரப் பிணை­யி­னை­யில் விடு­வித்­தது. ஏனைய 12 பேருக்­கும் 50 ஆயி­ரம் ரூபா சரீ­ர­பிணை, மற்றும் 50 ஆயி­ரம் ரூபா ஆள்­பி­ணை­யு­டன் விடு­வித்­தது.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்