முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

ravi-640x400

பிணை முறி விவகாரம்; ரவி கருணாநாயக்கவிடம் நான்கு மணி நேரம் விசாரணை!


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், நேற்று (27) விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நான்கு மணிநேரம் நீண்ட இந்த விசாரணையின் போது, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால், அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது எனத் தெரிய வருகிறது.

நேற்றுக் காலை 9.30 மணியளவில், ஆணைக்குழுவுக்குச் சென்ற ரவி கருணாநாயக்க, தன்னுடைய வாக்குமூலத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 1.30 மணியளவிலேயே புறப்பட்டுச் சென்றார் என, தகவல் மூலங்கள் தெரிவித்தன.

என்னவிதமான விடயங்கள் கோரப்பட்டன என்பது தொடர்பான விவரங்கள், தெளிவாகத் தெரியவில்லை.
பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கையில், ரவி கருணாநாயக்க எம்.பி தொடர்பாக, பின்வரும் விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது:

“24ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது போன்று, நிதியமைச்சராக இருந்த போது, ரவி கருணாநாயக்க எம்.பி, வோல்ட் அன்ட் றோ அசோசியேட்ஸ் (தனியார்) நிறுவனத்தால் (பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின், துணை நிறுவனமாக இது உள்ளது என்பதோடு, பேர்பெச்சுவர் ட்ரெஷரீஸ் நிறுவனத்தை உரிமைப்படுத்தியும் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்போரோ, இந்நிறுவனத்தையும் உரிமைப்படுத்தியும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கின்றனர்) மேற்கொள்ளப்பட்ட குத்தகைக் கொடுப்பனவுகளிலிருந்து, கணிசமான நன்மையைப் பெற்றுக் கொண்டாரா என்பது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கருத்திற்கொள்ள வேண்டுமென, நாம் பரிந்துரைக்கிறோம். ரவி கருணாநாயக்க எம்.பியாலும் அவரது குடும்பத்தினராலும், வசிக்கப்பட்ட வீட்டின் குத்தகை தொடர்பாகவே இது அமைந்துள்ளதோடு, இலஞ்சச் சட்டத்தின் கீழ், அவருக்கெதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாகவும் விசாரணை செய்யப்பட வேண்டும்”.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்