முதன்மைச் செய்திகள்

மேலதிக செய்திகள்

ravikaran

வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிஸாரால் கைதாகி விடுதலை! (இணைப்பு)


வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில், ரவிகரன் அவர்கள் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

அத்தோடு ஆர்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளார்.

 

இணைப்பு –

மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள் தமிழ்

மேலதிக தளங்கள்

பத்திரிகைகள்

செய்திகள் ஆங்கிலம்

மேலும்

சோதிடம்

தமிழர் அமைப்புகள்

மின்னஞ்சல்

சமையல் தளங்கள்

தமிழ் தளங்கள்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்

ஒளிப்பட தளங்கள்

தொழிநுட்ப செய்திகள்

தமிழ் தட்டச்சு

மென்பொருட்கள்

அறிமுகம்

சிறப்பு தளங்கள்

மனமகிழ் தளங்கள்

இணைய சஞ்சிகைகள்

இணைய வானொலிகள்

இணைய நேரடி வானொலிகள்

தமிழ் தொலைக்காட்சிகள்

களிப்பூட்டும் தளங்கள்

கிராமங்களின் தளங்கள்

கோவில்கள்

தமிழ்புத்தகம் வாங்க

தமிழர் திருமண தளங்கள்

குழந்தைகளுக்கான தமிழ்பெயர்கள்

இணையதேடு தளங்கள்

அகராதிகள்

தனிநபர் தளங்கள்