திலீபன் நினைவாலய பனர்களை கிழித்த புலனாய்வுத்துறையினர்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 30, 2018

திலீபன் நினைவாலய பனர்களை கிழித்த புலனாய்வுத்துறையினர்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையில் அங்கு துப்பரவுப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் பின்னர் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவரது தியாக வரலாற்றை சுருக்கமாக விளக்கும் பதாதைகள் சிங்களம்,தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த பதாதைகளே நேற்றிரவு  பொலிஸ் சீருடையில் இருவரும் இரண்டு பேர் சிவிலுடையிலும் வந்து பனர்களை கிழித்து சேதப்படுத்தியதை அப்பகுதியில் பொருத்தியிருந்த கமராவில் கண்டறியப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.32 மணிளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த ஒரு மாவீரனின் தியாகத்தின் புனிதத்தை கூட உதாசீனப்படுத்திய செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad