வடகிழக்கு செயலணி: பேரினவாத அரசை வெள்ளையடிக்கவா? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 24, 2018

demo-image

வடகிழக்கு செயலணி: பேரினவாத அரசை வெள்ளையடிக்கவா?

தமிழர் தாயகத்தின் மேம்பாட்டை உண்மையாகவே விரும்பும் எவரும் அதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தடையாக இருக்க மாட்டார்கள்.
ஆனால் ‘தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் இலங்கை ஆட்சியாளர்களின் கபடத்தனமான மேலாதிக்க அரசியல் பொருளாதார நலன்களை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்பாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

180822+Myliddy+harbour+inauguration


தமிழர் நலனுக்காக எத்தனை குழுக்கள், செயலணிகள்,திட்டங்கள். அத்தனையும் கசப்பான பட்டறிவையே எமக்குத் தந்து சென்றன.

எமது பகுதியின் மேம்பாட்டுக்குத் தேவையான கட்டமைப்புக்கள் ஏலவே
நிறைய உள்ளன. அவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சிறப்பாகச் செய்ய முடியும். உண்மையில் இங்கு தேவைப்படுவது ஆட்சியாளரின் மனமாற்றமே. இதுவரையான நல்லாட்சி அந்த நம்பிக்கையை எமக்குத் தரவில்லை
எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்பில்லை.
social-naatham

அரச தலைவரின் செயலணியில் எமது தலைவர்கள் பங்கெடுப்பதன் மூலம் ஒப்பீட்டு ரீதியில் இலங்கை அரசு அடையப் போகும் நன்மைகளே (முக்கியமானவை தமிழர் நலனுக்கு எதிரானவை) அதிகம்.

உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நலன்,வழமையான திட்டங்களை பெரியளவில் பரப்புரை செய்வது,தவிர்க்க முடியாத ஒரு தரப்பாக இராணுவத்தை மாற்றுவது, ஆக்கிரமிப்புக்களுக்கு சட்ட
வலுவைப் வழங்குதல்,காலங்கடத்துதல் போன்றவற்றுக்கு அப்பால் எதுவும் இருக்கப் போவதில்லை.

இதை உணரும் நிலையிலும் இப்போது எம்மவர்கள் இல்லை.
தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?

அற நனைந்தவனுக்கு கூதலுமில்லை குளிருமில்லை.

பதிவர்: கந்தையா அருந்தவபாலன்

Post Bottom Ad

Pages