கணபதி காங்கேசர் பொன்னம்பலம் நினைவுநாளும் 50 க்கு 50 உம் - கோபி ரத்தினம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 8, 2019

கணபதி காங்கேசர் பொன்னம்பலம் நினைவுநாளும் 50 க்கு 50 உம் - கோபி ரத்தினம்

நாளை திரு கணபதி காங்கேசர் பொன்னம்பலம் அவர்களின் 42வது நினைவு தினம்.
திரு. பொன்னம்பலம் அவர்களின் அரசியற் கொள்கைகளுடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவர் ஒரு காலத்தில் தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக இருந்தார் என்பதனால் அவருக்குரிய மரியாதையை வழங்குவதில் எனக்கு எதுவித தயக்கமும் இல்லை.
ஐம்பதிற்கு ஐம்பது என்ற உடன்பாட்டுடன் தீர்மானம் எடுக்கும் ஜனநாயக முறை யை consensus democracy (https://en.wikipedia.org/wiki/Consensus_democracy) வலியுறுத்திய அவர் பின்னாளில் ஒற்றையாட்சி முறைக்குள் அரசியற் தீர்வு காண முயன்றார். 1939ம் ஆண்டு இலங்கை தேசிய நிர்ண்ய சபையில் தனது ஐம்பதிற்கு ஐம்பது கொள்கை பற்றி ஆற்றிய நீண்ட உரை கவனத்திற்குரிய அரிய ஆவணம் . https://sangam.org/…/…/2012/09/Ponnambalam-50-50-Speech1.pdf
திரு. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் கொங்கிரஸ் கட்சியிலிருந்து 1949 ம் ஆண்டு பிரிந்து சென்ற திரு. செல்வநாயகம் கூட்டாட்சிக் கோரிக்கையை தமிழரசுக்கட்சியின் கொள்கையாக முன்வைத்தார், பின்னர் 1976 இல் தனிநாட்டுக் கோரி்ககையை முன்வைத்தார்.
திரு. பொன்னம்பலத்திற்கும், தமிழ்க் கொங்கிரஸ் கட்சிக்கும் எதிரான அரசியலை வைத்தே நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி வந்த தமிழரசுக்கட்சி, இன்றுஎழுபது வருடங்கள் கழிந்த நிலையில் ஒற்றையாட்சிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. அபிவிருத்தி பற்றிப் பேச ஆரம்பித்துள்ளது.

திரு. பொன்னம்பலம் தொழில் அமைச்சராகப் பதவி வகித்த ஐந்தாண்டு காலத்தில் வடக்கு - கிழக்கில் ஐந்து பாரிய தொழிற்சாலைகைள நிறுவினார். அதற்கு பிற்பாடு இப்பிரதேசத்தில் எந்த ஒரு தொழிற்சாலையும் அரசாங்கத்தால் நிறுவப்படவில்லை.
அன்றைக்கு திரு. பொன்னம்பலத்தை எதிர்த்து அரசியல் செய்த தமிழரசுக்கட்சியின் இன்றைய உறுப்பினர்கள் கோவிற் கேணியை அரசாங்க நிதியில் தூர் வாரிவிட்டு அதனை தங்களது சாதனையாகக் காட்டி வருகின்ற நிலையுடன் ஒப்பிடுகையில் திரு. பொன்னம்பலம் சாதித்தவையின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
திரு. பொன்னம்பலம் ஆரம்பித்த அகில இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் கட்சி, இன்று தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை முன்னிறுத்தியிருப்பது தமிழ் அரசியற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது.
தமிழ் கொங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர் திரு. கஜேந்திரகுமார், திரு. பொன்னம்பலம் காலமானபோது மழலைப் பருவத்தில் இருந்தார். பின்னாளில் அவர் அரசியலுக்கு வந்த போதிலும், திரு. பொன்னம்பலத்தின் அரசியற்கருத்துகள் தொடர்பில் விமர்சனபூர்வமான பார்வையைக் கொண்டிருக்கிறார்.

பதிவர் - கோபி ரத்தினம்

No comments:

Post a Comment

Post Bottom Ad