சிறிய படமா? சில்லறைகள் அல்ல; சிறிதரன் காட்டம்!? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 7, 2019

சிறிய படமா? சில்லறைகள் அல்ல; சிறிதரன் காட்டம்!?

ஶ்ரீலங்கா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்தில் நான்கு மில்லியன் ரூபா செலவில் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 03 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

இதன் போது விபரங்கள் அடங்கியதாக குறித்த அபிவிருத்தி திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் தேவாலயத்தின் முன்பாக ஏ9 பிரதான வீதியில் அமைச்சர் சஜித் பிறேமதாசவின் படத்தை பெரிதாகவும், அதன் மேற்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் படங்களுடன் பதாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று 06 ஆம் திகதி குறித்த பதாதையில் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் படம் தீடிரென ஸ்ரிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த போது

பதாகையில் காணப்பட்ட தனது படத்தை மறைத்துவிடுமாறும், அரசின் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் தனது படத்தை இட்டு விளம்பரங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறிவித்தமைக்கு அமைவாக தாம் அவரின் படத்தை மறைத்து விட்டதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் சிறியதாக படம் போட நாம் சில்லறைகள் அல்ல என்று சிறிதரன் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad