"எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் ...." என்ற பாடலை முடிக்கமுதலே
"என்ன தம்பி தலைவரை தலைவர் என சொல்ல கஸ்ரமோ?" என்றான் ஒருவன்.
"ஓமோம் கதைக்கும் போது தலைவர் எனச் சொல்வது தான் சரி. இது பாடல் தானே".
"தலைவர் என்று சொல்வதை சரியல்ல தேசியத்தலைவர் என்றுதான் சொல்லவேணும். அவர் எங்கட தேசியத்தலைவர்" என்றான் இன்னொருவன்.
"ஓமோம் தேசியத்தலைவர் என்று சொல்வது நல்லது"
"தேசியத்தலைவர் என்று மொட்டையாக சொல்லக்கூடாது. தமிழீழத் தேசியத்தலைவர் என்று சொல்வதுதான் சரி" என்றான் மற்றொருவன்.
"ஓமோம் தமிழீழத் தேசியத்தலைவர் என்று சொன்னால் மிகச் சரியாக இருக்கும். தமிழீழம் என்ற தேசத்தையும் குறிக்கும்"
"எங்கட தேசியத்தலைவர் தமிழீழத் தேசியத்தலைவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் தேசியத்தலைவர் என்று சொல்வதுதான் சரி"
"....."
No comments:
Post a Comment