கடிதம்: முரண்பாடுகளும் அபத்தங்களும் - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 2, 2022

கடிதம்: முரண்பாடுகளும் அபத்தங்களும் - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்


இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு , இலங்கைத் தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி , தமிழீழ விடுதலைக் கழகம் , ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட் ], ஈழ மக்கள் விடுதலை முன்னணி  மற்றும்தமிழ் தேசியக் கட்சி  ஆகியவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. 29, டிசம்பர்2021 திகதியிடப்பட்ட  கடிதம்,  19,ஜனவரி 2022 அன்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை  முழுமையாக அமு ல்படுத்துவதை உறுதி செய்யுமாறு இந்தியாவை வலியுறுத்துவதே கடிதத்தின் முக்கிய நோக்கமாகும். , இது மாகாண சபை முறையை உருவாக்க வழிவகுத்தது. கடிதம் பல காரணங்களுக்காக சிக்கலாக இருந்தது.


கடிதத்தின்  முக்கியமான சில விடயங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் பிரச்சினைகள் பற்றி இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.


அதிகளவுக்கு பிரபல்ய ப்படுத்தப்பட்ட கடிதம் மூலம் , 13வதுதிருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு  தமிழ்க் கட்சிகள் இப்போது ஏன்   முடிவு செய்தன?என்பது  முதலாவது  விடயம்.


எவரும்  விளக்கவில்லை. விளக்கமளிப்பது குறித்து எவரும்   கவலைப்படவில்லை. கையொப்பமிட்டவர்கள் தங்கள் தொகுதிகளிலுள்ள  தமிழ் வாக்காளர்களுக்கு கூட அது குறித்து  விளக்கவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளின்  தமிழ் வாக்காளர்கள் மீதான இகழ்ச்சியை  இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


வாக்காளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் மட்டுமின்றி, கட்சிக்குள் உள்ளவர்களுக்கும் அந்தக் கடிதத்தின் காரணம் புரியவில்லை.


உதாரணமாக, இலங்கை ஊடகவியலாளர் ஒருவரின் கூற்றுப்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என அறிவித்துள்ளார்.


நியாயபடுத்தல்  இல்லாதமை  பல்வேறு கருத்துக்களுக்கு  வழிவகுத்தது. இந்திய அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் கடிதம் எழுதப்பட்டதாக ஒரு கருத்து  பரிந்துரைக்கிறது. இந்தகருத்தை  உறுதிப்படுத்த எந்தவொரு  ஆதாரமும் இல்லை. எவ்வாறாயினும், அது உண்மையாக இருந்தால், தமிழ்க் கட்சிகள் இந்தியாவில் இருந்து அறிவுறுத்தல்களை வெறுமனே நிறைவேற்றியுள்ளனஎன்பதாகும்..


சிறிய  தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணிஇந்த கடிதத்தை விரும்பாமல் ஜனவரி 30 அன்று ஒரு கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது . இதற்கு பதிலடியாக, கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அவசர கடிதத்திற்கான காரணத்தை ஒருவர் காத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.


 இரணடாவது  விடயம்  தமிழ்க் கட்சிகளின் பொதுவான பலவீனங்களையும் அவற்றின் அரசியலையும் அந்தக் கடிதம் அம்பலப்படுத்தியது. தமிழ்த் தலைவர்கள் இந்திய உயர்மட்டத் தலைவர்களை நேரடியாக அணுகும் காலம் ஒன்று இருந்தது. தமிழர்  விடுதலை கூட்டணியின்தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களை பிரதமர் இந்திரா காந்தி நேரில் சந்தித்து இலங்கையில் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியிருந்தார் . தமிழக முதல்வர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரை தமிழ்ப் போராளித் தலைவர்கள் கூட அணுகியிருந்தனர். இந்த சந்திப்புகளும் அணுகலும் தமிழ் அரசியல் தலைமைகளின் கடந்த காலத்தில் இருந்தபலத்தையும்  அந்தஸ்தையும் உள்ளடக்கியது.


தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள் முக்கியமற்ற அரசியல் செயற்பாட் டாளர்கள் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர். அந்தஸ்தை மீட்டெடுக்க போராடுவதற்குப் பதிலாக, தாழ்த்தப்பட்டதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக்கொண்டனர். இதனால்தான் அவர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கடிதத்தை கையளிப்பதற்காக செல்ல வேண்டியிருந்தது. இந்தியா கடிதத்திற்கு தூண்டியிருந்தால் , தமிழ்த் தலைவர் குறைந்தபட்சம் புதுடி ல்லியில் ஒரு உயர்மட்டசந்தி ப்புக்கு  வலியுறுத்தியிருக்கமுடியும்  (அல்லது இருக்க வேண்டும்).


மூன்றாவதுவிடயம்  கடிதத்தில் நேர்மை இல்லை. கையொப்பமிட்டவர்கள் சமஷ்டிக்   கோட்பாடுகளின் அடிப்படையில்  தீர்வொன்றை முன்வைப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைகளைத் தீர்வாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற எண்ணப்பாட்டையே அது ஏற்படுத்துகிறது. (நீண்ட)


கடிதத்தின் கடைசி ப் பத்தியில், “அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு  தங்களிடம்  நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறுகிறது. 13ஆ வதுதிருத்தத்தை தமிழர்கள் தீர்வாக ஏற்காவிட்டால் இந்தியா அல்லது இலங்கை ஏன் அதை முழுமையாக அமு ல்படுத்த வேண்டும்? எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வதுதிருத்தத்தை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் என்றே அனுமானிக்க முடியும் .


அதே பத்தியில், தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் கூறுகிறது. மாகாண சபைகள் சுயநிர்ணயத்தை எவ்வாறு உறுதிப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமஷ்டி , சுயநிர்ணய உரிமை என்ற சொற்கள் தமிழ் மக்களை ஏமாற்றவே கடிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதுதான் இந்த கட்டுரையாளரின்   கருத்து.


நான்காவது ,  தமிழ் கட்சிகள் உண்மையானவிடயத்தை  தவறவிட்டுள்ளன . 13 ஆவது திருத்தம்  மற்றும் மாகாண சபைகளுக்காக வாதிடுவதற்கான காரணம் இருந்தால், அதற்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) 2020 பொதுத் தேர்தலில் (கிட்டத்தட்ட) மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  தனது அரசாங்கம் “ஒரு நாடு – ஒரு சட்டம்” என்ற கருத்தீட்டை உறுதிப்படுத்த புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் என்று அறிவித்திருந்தார் ..


ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் பிரதமர் ராஜபக்ச  உட்பட தற்போதைய தலைவர்கள் இனரீதியிலான அதிகாரப் பகிர்வில் நம்பிக்கைகொண்டிராததால் , புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்ய முடியும். எனவே, மாகாண சபைகளுக்கு உண்மையான ஆபத்து சாத்தியமான புதிய அரசியலமைப்பில் இருந்து உருவாகிறது. கையொப்பமிட்டவர்கள் இந்த ஆபத்தை கூட சுட்டிக்காட்டவில்லை. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முறையீடு செய்வது மிகவும் வலுவான வி  வாதமாக இருந்திருக்கும். மாறாக வரலாற்றின் அடிப்படையில் முழுமையாக அ தனை அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழ் கட்சிகள் வாதிட்டுள்ளன . தற்போதைய அரசாங்கத்தை விமர்சிப்பதில் உள்ள தயக்கமே இந்த ‘விடுபடலுக்கு’ காரணமாக இருந்திருக்கலாம்.


ஐந்தாவது  விடயம்,, தமிழ்க் கட்சிகள் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரி பிழையான வாதத்தை முன்வைத்துள்ளன .. இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இந்தியத் தலைவர்களின் கடந்தகால வாக்குறுதிகள் மற்றும் நடவடிக்கைகள்  காரணமாக 13 ஆவது திருத்தத்தை  முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். உதாரணமாக, “ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கீழ் 1995 மற்றும் 1997 இல் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான அரசாங்க முன்மொழிவுகள் மற்றும் 2000 இன் அரசியலமைப்பு சட்டமூலம், அனைத்தும் விரிவான அதிகாரப் பகிர்வை முன்மொழிந்தன” என்று கடிதம் கூறுகிறது. முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க ஒரு மதிப்பிழந்த அரசியல் தலைவர் என்பதுடன் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் அவர் தொடர்பாக  எந்த நிலைப்பாடும் இல்லை. எனவே, இது பலவீனமான வாதம். தற்போதைய தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி ராஜபக்சவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் முக்கியம். ஜனாதிபதி ராஜபக்ச எப்போதுமே எந்தவொரு அதிகாரப் பகிர்வுக்கும்  எதிராக நின்றார். போரில் வெற்றி பெற்ற பின்னர், பாதுகாப்புச் செயலாளர்கோத்தாபய ராஜபக்ச  அதிகாரப் பகிர்வுக்கு எதிராக வெளிப்படையாக வாதிட்டார். வடக்கு – கிழக்குமாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை  என்று வாதிட்டார்


இந்த வாதத்தின் அடிப்படையில் 2019 தேர்தலில் வெற்றி பெற்றார். எனவே,முன்னைய அரசாங்கங்கள்  மற்றும் தலைவர்களின் நடவடிக்கை மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் 13வதுதிருத்தத்தை  முழுமையாக அமு ல்படுத்த வேண்டும் என்று வாதிடுவது பலவீனமான அணுகுமுறையாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் என்பதாலேயே  13வதுதிருத்தத்தை  முழுமையாக அமு ல்படுத்தப்பட வேண்டும்.


ஆறாவதுவிடயம், கடிதத்தின் முதல் வாக்கியமானது தவறாக வழிநடத்துவதாகவும்  மற்றும் உண்மையான  தவறாகவும்  இருக்கமுடியும் . “1948 இல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து, தமிழ் பேசும் மக்கள்[ நான்அழுத் தியுரைப்பது  ) அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களிடமிருந்தும் கோரி வருகின்றனர்” என்று இந்த வரி கூறுகிறது. இந்த அறிக்கையில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, 1948 இல் சுதந்திரத்திற்கு முன்னரே தமிழர்கள் “அதிகாரப் பகிர்வை” கோரினர். பிரித்தானிய சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும்  திட்டத்தை வடிவமைக்க இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின்தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பது-ஐம்பதுயோசனையை  முன்வைத்தார். பெரும்பான்மை சிங்கள சமூகம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையில் பாராளுமன்ற ஆசனங்கள் சமமாக பிரிக்கப்பட வேண்டும் என்று பிரேரணை பரிந்துரைத்தது. இந்தக் கோரிக்கை அதிகாரப் பகிர்வுத் திட்டமாகும். எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் அதிகாரப் பகிர்வைக் கோரினர் என்று வாதிடுவது நுட்ப ரீதியாக தவறானது. இரண்டாவதாக, “தமிழ் பேசும்” மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோருவதாக அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது. “தமிழர்கள்” மற்றும் “தமிழ் பேசும் மக்கள்” இடையே வேறுபாடு உள்ளது. இரண்டாவது பிரிவில் இலங்கை முஸ்லிம்களும் அடங்குவர். சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் கொழும்பில் அரசாங்கங்களுடனும் சிங்கள மக்களுடனும் தங்களை இணைத்துக் கொண்டதுடன்  அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை. அவர்கள் சில சிங்களவர்களை விட ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் புலிகளுக்கு எதிரான போரில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தனர். எனவே, “தமிழ் பேசும்” மக்கள் அதிகாரப் பகிர்வைக் கோருவதாகக் கூறுவது நேர்மையற்றது. எனினும்,உண்மையில்  தமிழர்கள் அதிகாரப் பகிர்வைக் கோரினர்.


ஏழாவது விடயம்  கையொப்பமிட்டவர்களின் பட்டியலானது  தமிழர் கட்சி கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு ஏற்பாடுகள் பற்றிய குழப்பத்தை உருவாக்குகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாகும். உதாரணமாகதமிழரசுக்கட்சி ,டெலோ  மற்றும் புளொட் ஆகியவைதமிழ் கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கின்றன. எனினும், தமிழ் கூட்டமைப்பு ,தமிழரசுக் கட்சி  புளோட் ஆகிய கட்சிகள் தனித்தனியாக கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சுயாதீன மான  அரசியல் கட்சி என்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒருவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ ராஜவரோதயம் சம்பந்தனுக்கு  கடிதத்தில் இடமளிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் புகழின்  ஓரங்கத்தை  விரும்பினர்.


இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் அவசர கடிதம் கையளிக்கப்பட்டு சுமார் இரண்டு வாரங்களா கிவிட்டது. புது டில்லி அந்தக் கடிதத்திற்குப் பதில் அளிக்கவில்லை அல்லது 13வதுதிருத்தத்தை  முழுமையாக அமு ல்படுத்துவது குறித்து எந்த உறுதிமொழி யும்  வழங்க கவில்லை. கடிதம் அங்கீகரிக்கப்படாமல் கொள்ளப்படாமல் போனால் என்ன நடக்கும்? தமிழ் அரசியல் , அதன் அதிகாரம் மற்றும் அதன் செல்வாக்கு பற்றி அது என்ன சொல்லும்?


டாக்டர். எஸ்.ஐ. கீதபொன்கலன், மேரிலாந்தின்  சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின்முரண்பாட்டுக்குத் தீர்வு தொடர்பான திணைக்களத்தின்   தலைவராக உள்ளார்.


யூ ரேசியா ரெவியூ

link- Eurasiareview

Sri Lanka Tamil Party Letter To Modi: Anomalies And Absurdities – OpEd

 Dr. S. I. Keethaponcalan

No comments:

Post a Comment

Post Bottom Ad