எவரின் குழப்பமும் எம்மை குழப்பாது!! - நாதம் 01 - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, September 16, 2018

எவரின் குழப்பமும் எம்மை குழப்பாது!! - நாதம் 01

தியாகத்திருநினைவு நாளினை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு அப்பிரதேசம் வாழ் இளையவர்களும் செயற்பாட்டாளர்களும் மிகவும் பிரயத்தனப்பட்டனர்.

கழிவுகளாலும் விளம்பர தொட்டிலாகவும் இருந்த இடத்தை சுத்தப்படுத்தி, வேலியடைத்து, நினைவு இடமாக மகிமைப்படுத்த, அதனையும் இரவு ஒரு மணிக்கு சென்று பனர்களை கிழித்து போட்டனர்.
அதற்கும் காவலர்களை ஒழுங்குபடுத்தி, மீளவும் பனர்களை கட்டி, வளைவையும் ஏற்படுத்தி, திலீபன் உண்ணாநோன்பு தொடக்கிய நேரத்தில் நினைவு நிகழ்வை ஒழுங்குபடுத்த, அதனை குழப்பும்விதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு அங்கு சென்ற ஈபிடிபி உறுப்பினரும் மாவையின் உதவியாராக செயற்படும் ஒருவர் சென்று பூக்கள் தூவி விளக்கேற்றி படம் எடுத்து முகப்பு புத்தகத்தில் பதிவேற்றினார்.
எனினும் நினைவு நிகழ்வு சரியான நேரத்தில் ஆரம்பித்து, அனைவரும் உணர்வு ரீதியாக மலரஞ்சலி செலுத்தி முடிவடைய, இந்திய அரசால் வழங்கப்பட்ட வாகனத்தில் சிவிகே சிவஞானம் வந்திறங்கினார். அவரோடு ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த சிலரும் வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வு நிறைவடைய, சிவிகே சிவஞானம் உரையாற்ற விரும்பினார். அந்த உரை செய்யவேண்டும் என அவரோடு வந்த குழுவில் இருந்த துளசி உட்பட சிலர் வேண்டுகோளை முன்வைத்தனர். "பாடும் பறவைகள் வாருங்கள் புலிவீரன் திலீபனை பாருங்கள்" என்ற பாடல் காற்றலைகளில் தவழ்ந்துகொண்டிருந்தபோது அதனை நிறுத்துமாறும் தான் ஊடகங்களுக்கு திலீபனின் தியாகங்கள் பற்றி கருத்துரை வழங்கவேண்டும் என்றும் அவரது உதவியாளர் ஊடாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு தெரியப்படுத்தினார் சிவிகே சிவஞானம்.


அரசியல் பேசாது உணர்வு ரீதியான நிகழ்வு மட்டும் போதும் என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறவேண்டாம் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் வினயமாக கேட்டனர். திலீபனின் தூபியை முதலில் கட்டியவன் நானே என்றும் இங்கு உரையாற்றுவதற்கு உரித்து உள்ளது என்றும் வாக்குவாதப்பட்டார்.
அப்போதுதான் நிர்வாகத்துறையில் பணியாற்றி இறுதிக்காலத்தில் இயக்கமான துளசி, "நான் இயக்கம்" எனச் சொல்ல, ஏற்பாட்டுக்குழுவில் இருந்தவர்கள், "நாங்கள் எல்லோரும் இயக்கத்தோடு வேலை செய்தவர்கள் தான்.

திலீபன் அண்ணாவின் உணர்வு ரீதியான உன்னத போராட்டத்தை அரசியல்பேசி மலினப்படுத்தப்பட்டதாலே அரசியல் பேசக்கூடாது" என்ற நடைமுறை வந்ததை சுட்டிக்காட்டினர்.
ஆனால் வழமையாக சலசலப்புக்களை செய்தியாக்கும் இணையங்களும் பத்திரிகைகளும் இதனையும் செய்தியாக்கின.
ஆனாலும் உறுதியான செயற்பாடுகளே தேசிய விடுதலைக்கான போராட்டத்தை முன்னகர்த்தும் என்ற நம்பிக்கையோடு இன்னமும் உறுதியுடன் இளைஞர்கள்.

- நாதம் 01 -

பின்னிணைப்பு - சிவஞானம் கட்டிய தூபி https://www.facebook.com/kavi.arasi.125/videos/2183813581873928/

No comments:

Post a Comment

Post Bottom Ad