அத்தனையும் ஆட்டையைப் போட்ட குடும்பம் - மற்றவர்களை தியாகம் செய்யட்டாம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, August 23, 2021

அத்தனையும் ஆட்டையைப் போட்ட குடும்பம் - மற்றவர்களை தியாகம் செய்யட்டாம்


இலங்கை தீவு எதிர்கொண்டு நிற்கும் மோசமான நிதி நெருக்கடிகளுக்கு வினைத்திறனற்ற நிதி நிருவாகம் , ஊழல் மோசடிகள், தவறான முதலீடுகள், என்பன அடிப்படையான காரணமாக இருக்கின்றன என்பதை ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகள் மறைக்க முயற்சிக்கின்றார்கள்
ராஜபக்சே குடும்ப உறுபினர்களுக்கும் அவர்களின் நண்பர்களும் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் கோடிக்கணக்கான அரச பொது நிதியை திருடி இருக்கிறார்கள்.
சட்டவிரோதமாக செலவு செய்து இருக்கின்றார்கள்
குறிப்பாக,
மகிந்த ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்ட 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி நிகழ்வுகளை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் நிர்மாணிக்கும் திட்டத்தில் மட்டும் 300 மில்லியன் ரூபா அரச பணம் திருடப்பட்டது
மஹிந்த ராஜபக்சே அவர்களின் ஏற்பாட்டில் கீழ் நிரமணிக்கப்பட்ட கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையான விரைவு வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட 46.8 மில்லியன் பணத்திற்கு எவ் விதமான கணக்குகளும் இல்லை
ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் வகையின் 2,278,000 பெறுமதியான அரச பணத்தை சட்டவிரோதமாக செலவு செய்து இருந்தார்கள்
கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தனது மைத்துனர் உதய வீரதுங்க சகிதம் மிக் விமானங்கள் கொள்வனவின் போது போலி நிறுவனம் (Bellimissa Holdings Limited) ஒன்றின் பெயரில் 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மோசடி செய்து இருந்தார்
கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் தலைமையில் பெற்றோருக்கு நினைவு இல்லம் அமைப்பதற்காக 33 மில்லியன் பெறுமதியான அரச பொதுநிதி சட்டவிரோதமாக பயன்படுத்தி இருந்தார்கள்
நாமல் ராஜபக்சே அவர்கள் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கான நாளை அமைப்பு அரசுக்கு சொந்தமான 172 மில்லியன் ரூபா பணத்தை களவாடி இருந்தது
அதே போல நாமல் ராஜபக்சே அவர்கள் அரச பொதுநிதிக்கு சொந்தமான 45 மில்லியன் ரூபா பணத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டவிரோதமாக மோசடி செய்து இருந்தார்
இது தவிர, நாமல் ராஜபக்சே 500,000 அமெரிக்கா டொலர்களை இலஞ்சமாக பெற்று கொண்டு அரச நிதியை துஸ்பிரோயோகம் செய்து இருந்தார்
பாடசாலை மாணவராக இருந்த யோசித்த ராஜபக்சே அவர்களுக்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 365 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான எவ்விதமான கணக்குகளும் இல்லை
கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தொடர்புடைய அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில் 11.4 பில்லியன் அரச பொது நிதிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது
பொருளாதார விவகார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே அவர்கள் திவிநெகுமே அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 3000 மில்லியன் ரூபா பணத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாடல் செய்து இருந்தார்
சட்டவிரோத பணபரிமாற்றத்தின் மூலம் இலங்கையின் பல பகுதிகளில் 282 மில்லியன் ரூபா பெறுதியான சொத்துக்களை பசில் ராஜபக்சே அபகரித்து இருக்கின்றார்
பசில் ராஜபக்சே அவர்களின் பொறுப்பின் கீழ் அப்பாவி பொதுமக்களுக்கு என உருவாக்கப்பட்ட அரச பொது வீடமைப்பு திட்டத்தில் செய்த மோசடி மட்டும் 70 மில்லியன் அரச பொது நிதிக்கு எவ்விதமான கணக்குகளும் இதுவரை இல்லை
அதே போல ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் நண்பர்களும் சட்டவிரோதமாக சம்பாதித்த 2 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்களின் பொது அரச பொது நிதி கையாடல் செய்யப்பட்டு இருந்தது.
இது போதாதென்று தேர்தல் அரசியலுக்காக முன்னெடுக்கப்பட்டு தோல்வியடைந்த பாரிய அபிவிருத்தி (?) திட்டங்களான,
அம்பாந்தோட்டை துறைமுகம் ,
அம்பாந்தோட்டை விமான நிலையம் ,
கொழும்பு தாமரை தடாகம்
100,000 பேருக்கான அரச வேலைவாய்ப்பு மற்றும் 50,000 பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு போன்ற பல திட்டங்களில் அரச பொது நிதி பாரிய இழப்பை சந்தித்தது.
அதே போல மேற்குறித்த திட்டங்களுக்காக பெருமளவு கடன்கள் பெறப்பட்டன. சாத்திய ஆய்வுகள் இன்றி பணம் அச்சிடப்பட்டன
இந்த சூழ்நிலையில் அரச பொது நிதி எதிர்கொண்டு நிற்கும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்ககாக அரச ஊழியர்களை தங்களது மாத சம்பளத்தை தியாகம் செய்யுமாறு ராஜபக்சே நிருவாகம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன
கோடிக்கணக்கான பணத்தை திருடிய ராஜபக்சே குடும்பத்தினரை தவிர்த்து வெறும் 20000-50000 வரை சம்பளம் பெரும் அரசாங்க ஊழியர்களை தியாகம் செய்ய கோருவது கோரமானது.

பதிவர் - இனமொன்றின் குரல்

No comments:

Post a Comment

Post Bottom Ad