திலீபன் நினைவேந்தல் தடை நீதிமன்றினால் நிராகரிப்பு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 25, 2018

திலீபன் நினைவேந்தல் தடை நீதிமன்றினால் நிராகரிப்பு!

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாளை நல்லூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி, சிறிலங்கா காவல்துறையினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றக் கட்டளைப்படி, யாழ். மாநகர சபை ஆணையாளரும், மாநகரசபையின் சார்பில், சட்டவாளர் சுமந்திரனும் முன்னிலையாகினர்.
இதையடுத்து, நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ். நீதிவான் நிராகரித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad