சிவஞானம் எப்போதுமே ஒரு தடைக்கல் என்பதை அவர்களே அறிந்திருந்தார்கள் - விக்கி - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, October 20, 2018

சிவஞானம் எப்போதுமே ஒரு தடைக்கல் என்பதை அவர்களே அறிந்திருந்தார்கள் - விக்கி

வடமாகாணசபை ஒன்றுமே செய்யவில்லையென வடக்கு அவைத்தலைவர் கூறுகிறார். ஆனால் நீங்கள் மக்களிடம் சென்று கேளுங்கள். மாகாணசபையால் பலனடைந்தவர்கள் இருக்கிறார்கள். மாகாணசபை ஒன்றுமே செய்யவில்லையென அவர் கூறினார் என அவர்களிடம் கூறினால் செருப்படிதான் கிடைக்கும்

இப்படி காட்டமாக கூறியிருக்கிறார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். தமிழ் வாரஇதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரரீதியாக மாகாணசபை ஒன்றையும் செய்யவில்லை, ஐந்து வருடகாலத்தை வீணடித்திருக்கிறோம் என அவைத்தலைவர் அண்மையில் கூறியிருந்தார். அதை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பப்பட்டிருந்தபோதே, மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓய்வுபெற்ற கல்லூரி அதிபர் (அருந்தவபாலன்) அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் மாகாணசபை குழப்பங்களிற்கு அவர் நால்வரை அடையாளம் காட்டியிருந்தார். அவர் கூறியது சரியொன்றே நினைக்கிறேன். முரண்பாடுகள் எழ அந்த நால்வருமே காரணமாக இருந்தார்கள்.

நால்வரில் அவைத்தலைவரும் ஒருவர். ஆகவே, அப்படித்தான் அவர் கூறுவார். தடைகளிற்கு தானே காரணமென்பதை அவர் கூறுவாரா?

மத்திய அரசாங்கம் திட்டமிட்டு பறைசாற்றிய குறைகளையே அவரும் கூறியிருக்கிறார். நாங்கள் ஐந்து வருடங்களை அவர் முன்னிலையில் வீணடித்திருக்கலாம். அதற்கு அவரே பொறுப்பு. ஆனால் எமது மாகாணத்தில் நாம் காலத்தை வீணடிக்கவில்லை. உதவிகள் பெற்ற மக்களிடம் போய் கேளுங்கள். அவர் இப்படி கூறினார் என அவர்களிடம் கூறினால், செருப்படிதான் கிடைக்கும்.

சில சமயங்களில் எமது அவைத்தலைவரே எமக்கு தடையாக இருந்துள்ளார். எந்தெந்த சட்டங்களை இயற்றுவது, எவற்றை புறம் வைப்பது என்பதில் அவர் தனிப்பட்ட கரிசனை எடுத்து நாம் இயற்றும் சட்டங்களை தடுத்தோ, இயற்றாமலோ வழிநடத்தி வந்துள்ளார் என்றார்.

பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த போது, மத்திய கிழக்கு முதலீட்டில் 200 ஏக்கர் காணியை நிர்ணயித்து, திட்டம் குறித்த சகல அறிக்கைகளையும் காணி ஆணையாளர் நாயகத்தின் முறைப்படியான கடைசி சிபாரிசுக்கு அனுப்பி வைத்தோம். இன்றுவரை அவரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. இந்த 200 ஏக்கரில் வனத்திணைக்களத்திற்கு சொந்நதமான காணியும் உ்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காணிகள், எமது மக்களிற்கு கொடுத்து, அவர்கள் குடியிருக்காததால் திரும்ப எடுக்கப்பட்டவை.

போரால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை போருக்கு பின்னர் வனத்திணைக்களம் அடாத்தாக எடுத்து வருகிறது. அவர்களிடம் காணி வரைபடமும் இல்லை. வரைபடத்தின் அடிப்படையில் காணியை அடையாளம் காட்டுவது அவர்களிற்கு பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் கூகிள் மூலமே பார்த்து காணிகளை எடுத்துள்ளார்கள். நேரில் சென்று பார்த்து அடையாளப்படுத்தவில்லை. ஆனாலும் வடமாகாணத்தில் உள்ள காணிகளை நாம் பாவிப்பதை தடுத்து வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப் புலிகளின் காலத்தில் மூன்று பெயர்களை இடைக்கால நிர்வாகசபைக்கு தலைவராக பிரேரிக்குமாறும் தான் முதலாவது நபரையே தெரிவுசெய்வேன் எனவும் ஜே ஆர் ஜெயவர்த்தனா தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு பிரேரிக்கப்ப்பட்டபோது இரண்டாவது நிலையிலிருந்த சிவஞானத்தை தெரிவுசெய்வதாக அறிவித்திருந்தார். இதனால் விடுதலைப்புலிகள் கோபமடைந்ததாக விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில் குறிப்பிட்டடிருந்தமை சுட்டிக்காட்டதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad