உங்களின் வாழ்வுக்காய் இனத்தின் வாழ்வை விற்காதீர்!
2009 இற்குப் பின்னரான காலத்தில் தமிழர்களின் அரசியலை தான் பேச விரும்பவில்லை என்றும் இலக்கிய உலகில் தனது படைப்புக்களை கொண்டுசெல்லப் போவதாய் தனது பதிவுகளை செய்துகொண்டிருந்தார் குணா கவியழகன் ( இவர் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தபோது அதிகார துஸ்பிரோகத்திற்காக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு விலக்கப்பட்டவர்.).
இதன் பின்னர் அறிவியக்கம் என்ற பெயரில் ஒரு யுரியூப் ஊடாக அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வந்தார்.
வழமைக்கு மாறாக அதற்கு வரவேற்பு கிடைத்தது. (இப்போது அந்த கவனத்திற்குரியதாக வந்ததற்கும் பின்புலங்கள் இருக்குமோ என்ற அச்ச நிலை. அதனை பின்னர் பார்ப்போம்.)
இப்போது தமிழர்களுக்கு பேரழிவு வரப்போவதாகவும் இருக்கின்ற 13வது சட்டத்திருத்தத்தில் உள்ள விடயங்கள் அனைத்துமே பூச்சியநிலைக்கு வந்துவிடும் எனவும் அதனை கோத்தாவிடமிருந்த பாதுகாக்க புதிய உபாயங்களை சொல்லுகின்றாராம்.
முதலில் 13வதை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவுக்கு கடிதம் எழுதட்டாம். (அது நிறைவடைந்துவிட்டது.)
இனி அதே கோரிக்கையை கோத்தாவிடமும் மகிந்தவிடமும் ரணிலிடமும் சஜித்திடமும் முன்வைக்கட்டாம்.
இப்போது ஒருபடி மேலே போய் ஜிஎஸ்பி வரிச்சலுகை கொடுக்கப்படவேண்டும் எனவும் அதற்காக அரசுக்காக சுமந்திரன் கதைப்பது சாணக்கியத்தின் உச்சமாம்.
இதுதான் அவரது இராசதந்திரமாம்.
இதனை விடுத்து 13வதில் தமிழர்களுக்கான அதிகாரம் இல்லை எனவும் அதற்குள் தமிழர்களின் தீர்வு என தமிழினத்தின் தலைவிதியை முடக்காதீர் எனவும் தமிழர்களின் தீர்வாக முழுமையான சமஸ்டியை கேளுங்கள் எனக் கேட்பவர்கள் முட்டாள்களாம்.
இவர்களது நோக்கம் தான் என்ன?
இப்போது 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என இந்தியாவுக்கு சிறிலங்காவுக்கு சர்வதேச அரசுகளுக்கு அழைப்பு விடுக்கின்றார்கள்.
இதுதான் தீர்வு எனின் இதற்கு ஏன் இந்தியா? நீங்கள் நேரடியாகவே கோத்தபாயவிடமே கண்ணை மூடிக்கொண்டு கையை நீட்டலாமே. (அது தான் நோக்கம் என்பதே எமது பார்வை. அதனை பிறகு பார்ப்போம்.)
இப்போது இவர்களது நோக்கம் புரிகின்றதா?
No comments:
Post a Comment