பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது - நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment