தர­மான ஒரு தமிழ் பாட­சாலை கூட இல்­லாத கேகாலை மாவட்டம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, August 16, 2018

தர­மான ஒரு தமிழ் பாட­சாலை கூட இல்­லாத கேகாலை மாவட்டம்

சப்­ர­க­முவ மாகா­ணத்தின் மாகாண கல்வி அமைச்சின் நிர்­வா­கத்தில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் நூற்றி நான்கும், கேகாலை மாவட்­டத்தில் அறு­பத்­தொன்­ப­து­மாக மொத்தம் நூற்றி எழு­பத்தி மூன்று தமிழ்ப் பாட­சா­லைகள் இயங்­கு­கின்­றன. இவற்றில் மத்­திய கல்­வி­ய­மைச்சின் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட தேசிய பாட­சாலை ஒன்றும் இல்­லா­த­துடன் கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர உயர்­தர வகுப்பில் கலை, கணிதம், வர்த்­தகம், விஞ்­ஞானம் ஆகிய நான்கு பிரி­வு­க­ளையும் கொண்ட 1 ஏபி தரத்­தி­லான ஒரு பாட­சா­லையும் இல்­லை­யென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வி­ரு மாவட்­டங்­களும் நாட்டின் கல்வித் தரத்தில் உயர்ந்­த­வை­க­ளாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருப்­பினும் தமிழ் பாட­சா­லை­களின் நிலையை நோக்­கும்­போது அவை பின்­ன­டைந்த நிலை­யி­லே­யே­யுள்­ளன.


இவற்றில் கேகாலை மாவட்ட தமிழ்ப் பாட­சா­லை­களை ஆய்வு செய்­யும்­போது அம்­மா­வட்­டத்­தி­லுள்ள அப்­பா­ட­சா­லைகள் பெரும்­பா­லா­னவை பாட­சாலைக் கட்­ட­மைப்­புக்குத் தேவை­யான அடிப்­படைப் பௌதீக வளங்­க­ளையும், ஆசி­ரிய ஆளணி வளங்­களையும் கொண்­ட­வை­யாக இல்­லாமை வெளிப்­ப­டு­கின்­றது. இம்­மா­வட்­டத்­தி­லுள்ள மூன்று கல்வி வல­யங்­க­ளான கேகாலை , தெஹி­யோ­விட்ட, மாவ­னெல்ல ஆகி­ய­வற்றில் முறையே பன்­னி­ரெண்டு, ஐம்­பத்­தாறு, ஒன்று என்ற அடிப்­ப­டையில் அவை உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
கேகாலை கல்வி வல­யத்­தி­லுள்ள பன்­னி­ரெண்டு தமிழ்ப் பாட­சா­லை­களில் சென். மேரீஸ் தமிழ் மகா வித்­தி­யா­லயம் 1 சீ தரம் கொண்ட கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர வகுப்பில் கலை, வர்த்­தகம் ஆகிய இரு பிரி­வு­களைக் கொண்­ட­தா­க­வுள்­ளது. இரு பாட­சா­லைகள் கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண வகுப்­பு­வரை கொண்­ட­வை­யா­கவும் ஏனைய ஒன்­பது பாட­சா­லைகள் ஆரம்ப பாட­சா­லை­க­ளா­கவும் இயங்­கு­கின்­றன.
தெஹி­யோ­விட்ட கல்வி வல­யத்­தி­லுள்ள ஐம்­பத்­தாறு பாட­சா­லை­களில் எட்­டி­யாந்­தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்­தி­யா­லயம், புளத்­கொ­ஹுப்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லயம், ஸ்ரீவாணி தமிழ் மகா வித்­தி­யா­லயம், தெஹி­யோ­விட்ட தமிழ் மகா வித்­தி­யா­லயம், தெர­ணி­ய­கல கதி­ரேசன் மகா வித்­தி­யா­லயம் , சப்­பு­மல்­கந்த தமிழ் மகா வித்­தி­யா­லயம் ஆறும், உயர்­தர வகுப்­புகள் கொண்ட 1 சீ தரப் பாட­சா­லை­க­ளா­கவும் பன்­னி­ரெண்டு பாட­சா­லைகள் கல்விப் பொதுத் தரா­­தரப் பத்­திர சாதா­ரண தரம்­வரை கொண்ட டீ. 2 தரப் பாட­சா­லை­க­ளா­கவும் உள்ள நிலையில் ஏனைய முப்­பத்து நான்கு பாட­சா­லைகள் ஆரம்ப பாட­சாலை என்றே டீ. 3 தரத்­தி­லே­யே­யுள்­ளன.
மாவ­னெல்ல கல்­வி­வ­ல­யத்­தி­லுள்ள ஒரே தமிழ்ப் பாட­சாலை ஆரம்ப தரத்­தி­லான பாட­சா­லை­யா­கவே தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கேகாலை கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட வரக்­கா­பொல பிர­தே­சத்தில் கணி­ச­மான அளவில் தமிழ் மக்கள் வாழ்ந்த போதிலும் அப்­பி­ர­தே­சத்தில் ஒரு தமிழ்ப் பாட­சாலை கூட இல்­லாத நிலையில் அங்­குள்ள பிள்­ளைகள் மாற்று சமூக மற்றும் மாற்று மொழிப் பாட­சா­லை­களில் இணைந்து கற்கும் கட்­டாய நிலை காணப்­ப­டு­கின்­றது.
பத்­தா­யிரம் வரை­யான மாணவ, மாண­வியர் தமிழ்ப் பாட­சா­லை­களில் கற்கும் நிலையில் மூவா­யிரம் வரை­யான தமிழ்ப் பிள்­ளைகள் வேற்று சமூக பாடசா­லை­களில் கற்று வரு­வதும் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் நாட்டின் தேசிய கல்விக் கொள்­கைக்­க­மைய பிற சமூக பாட­சா­லைகள் பல­வற்றில் குறிப்­பாக சிங்­கள பாட­சா­லை­களில் கற்போர் இந்து சம­யத்தைக் கற்க முடி­யாத நிலை­யி­லுள்­ளனர். இந்­நிலை மத மாற்­றத்­திற்கும் மொழி மாற்­றத்­திற்கும் வித்­திடும் நிலையில் இன மாற்­றத்­திற்கும் வழி திறந்து விடு­கின்­றது.
கேகாலை மாவட்­டத்­தி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லை­களில் தமி­ழரோ இந்­துக்கள் அல்­லா­தோரே பெரும்­பாலும் ஆசி­ரி­யர்­க­ளாகக் கட­மை­யாற்றி வரு­வதும் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பல ஆரம்ப பாட­சா­லை­களில் சிங்­கள ஆசி­ரி­யர்­களும் கற்­பித்தல் செயற்­பாட்டில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையும் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. இதனால் தமிழ்ப் பாட­சா­லை­களில் ஆரம்பக் கல்­வியைப் பெறும் தமிழ், இந்துப் பிள்­ளை­க­ளுக்கு தாய்­மொ­ழி­யான தமி­ழையோ இந்து சம­யத்­தையோ கற்கும் உரிமை மறுக்­கப்­ப­டு­வதும் தெரி­ய­வந்­துள்­ளது.
கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தர வகுப்­பிலும் அதற்­கு­ரிய பொதுப் பரீட்­சை­யிலும் கட்­டாய பாடங்­கள் ஆறில் கணிதம், விஞ்­ஞானம், ஆங்­கிலம் ஆகிய பாடங்­க­ளுக்­கான ஆசி­ரி­யர்கள் இன்­றியே பல தமிழ்ப் பாட­சா­லை­களில் கற்கும் மற்றும் பரீட்­சைக்குத் தோற்றும் நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது. அநே­க­மாகத் தமிழ்ப் பாட­சா­லை­களில் ஆங்­கிலம் கற்­பிப்போர் சிங்­கள ஆசி­ரி­யர்­க­ளா­க­வே­யுள்­ளனர்.
உயர்­தர வகுப்பில் கலை மற்றும் வர்த்­தகப் பிரி­வுகள் உள்ள பாட­சா­லை­களில் அப்­பா­டங்­களைக் கற்­பிக்கும் தகைமை பெற்ற ஆசி­ரி­யர்கள் இல்­லா­மையும் குறிப்­பி­டத்­தக்க குறை­பா­டா­யுள்­ளது.
ஒரு பாட­சா­லைக்­கான கட்­ட­மைப்பு என்­பது பாட­சாலைக் கட்­டடம் மட்­டு­மல்ல. பெயரும் அல்ல. ஒரு பாட­சாலை முறை­யாகச் செயற்­பட கட்­டட வச­தி­களும் ஆசி­ரிய ஆள­ணியும் தேவை­யென்­ப­தற்­கப்பால் அதன் சூழலும் தேவை­களும் பேணப்­பட வேண்டும். இம்­மா­வட்­டத்­தி­லுள்ள தமிழ்ப் பாட­சா­லை­களில் பெரும்­பான்­மை­யா­ன­வற்றில் போதிய மல­ச­ல­கூட வச­திகள், தண்ணீர் வச­திகள், குடிநீர் வச­திகள் என்­பன தேவை­யான அளவில் இல்­லாமை பாட­சாலை மாணவ, மாண­வி­ய­ருக்கு மட்­டு­மல்ல ஆசி­ரி­யர்­க­ளுக்கும் வச­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன.
பாட­சா­லை­களின் பாது­காப்­பிலும் கவனம் செலுத்த வேண்­டிய தேவை­யுள்­ளது. பெரும்­பா­லான தமிழ்ப் பாட­சா­லை­க­ளுக்கு எல்­லை­க­ளி­டப்­ப­டாத நிலையும் சில­வற்­றிற்கு எல்­லைகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டிருப் பினும் சுற்று மதிலோ, வேலியோ அமைக்­கப்­ப­டாத நிலையும் காணப்­ப­டு­கின்­றது. இந்­நிலை பாட­சா­லைக்­கு­ரிய காணி­களை வெளியார் ஆக்­கி­ர­மிக்­கவும் வழி செய்­கின்றது.
த. மனோ­கரன்  

[துணைத் தலைவரும்,  கல்விக் குழுச் செயலாளரும் அகில இலங்கை இந்து மாமன்றம்]

No comments:

Post a Comment

Post Bottom Ad