பா.ஜா.கா தலைவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பேச்சு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, August 26, 2018

பா.ஜா.கா தலைவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பேச்சு!

இந்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.பா.ஜா.காவின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் தமிழிசை சௌதர்ராஜன் மற்றும் துணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் சிங்களபௌத்த மயமாக்கல் மற்றும் காணி விவகாரங்கள் ஆகிய சமகால விடயங்கள் குறித்து உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.No comments:

Post a Comment

Post Bottom Ad