ச. பவனின் வாக்கு மோசடி தொடக்கம் சயந்தனின் அது வரை - அருந்தவபாலன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, September 28, 2018

ச. பவனின் வாக்கு மோசடி தொடக்கம் சயந்தனின் அது வரை - அருந்தவபாலன்

இதுவரைகாலமும் மௌனத்தை பேணிவந்த தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரான அருந்தவபாலன் அக்கட்சியில் காணப்படும் குறைபாடுகளை பற்றி வெளிப்படையாக தொலைக்காட்சியில் தோன்றி தெரிவித்தமை அக்கட்சி மட்டத்தில் கடும் அதிருப்தியை தோற்றுவித்திருப்பதாக நம்பகமாக அறியமுடிகின்றது.

இதில் சுமந்திரனின் தீடிர் வளர்ச்சியும் பேரினவாத அரசுகளின் கைப்பொம்மையாக தமிழரசுக்கட்சி செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளார் அருந்தவபாலன்.

வாக்குமோசடி மூலமே தான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை மீண்டும் கோடிகாட்டிய அருந்தவபாலன் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகியோரின் தனிப்பட்ட நலன்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் எனவும் தெரிவிக்கின்றார்.

மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

# சயந்தனின் தனிமனித ஒழுக்கம்
# சுமந்திரனின் தனித்த முடிவும் திமிரான செயற்பாடுகளும்
# சிறிதரனும் சுமந்திரனுக்கு மறைமுகமாக ஒத்துப்போகும் நிலை
# தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற 
# மோசடியும் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட விதமும்
#  ச. பவனுக்கு வாக்குகளை அதிகரித்தும் எனக்கு குறைத்து விகிதம் மாற்றப்பட்ட முறை
# பேராசிரியர் சிற்றம்பலத்தை பின்னுக்கு தள்ளுவதற்கே சரவணபவன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
# தமிழ் மக்கள் பேரவையில் இணைந்தமை சாட்டி சிற்றம்பலம் நீக்கப்பட்டமை தவறானது.
# மாவை இடையில் விட்டுப்போன கட்சியை காப்பாற்றியவர் சிற்றம்பலம் ஐயா
# தமிழ்த்தேசிய மக்கள் முன்னனயின் தமிழ்த்தேசியம் தொடர்பான சமரசமற்ற போக்கு.
# தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு கட்சி ரெலோ மட்டுமே. தமிழரசுக்கட்சி அதில் ஒரு அங்கம் அல்ல.
முழுமையான நேர்காணல் இணைப்புNo comments:

Post a Comment

Post Bottom Ad