இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் , மக்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள் பங்குபற்றிய கருத்தரங்கில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கு கடந்த மூன்று நாட்களாக தென்கொரியாவில் நடைபெற்றுவருகிறது.
"இராணுவமயமாக்கலையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்தல்"
புனிதம் மிக்க எம் தாய்நிலத்தினையும் எம் கடலையும் எம் உயிர்ப்பையும் மீள கோருதல்
எனும் தொனிப்பொருளில் தென்கொரிய தலைநகர் சியோலில் நடக்கின்ற சர்வதேச கருத்தரங்கு தொடரில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
பலஸ்தீனம் , காஷ்மீர், மியன்மார், இந்தோநேசியா, தென் கொரியா, துருக்கி, தாய்லாந்து, பசுபிக் தீவுகள், மேற்கு பப்புவா நியுகினி போன்ற நாடுகளின் மக்கள் செயல்பாட்டாளர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கருத்தரங்குத்தொடரில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி திரு கஜேந்திரகுமார் உட்பட, கலாநிதி சார்னி மாயுங்( மியன்மார் செய்ற்பாட்டாளர்),
சாரா அபப்னி( ஜோர்தான்),
நூர்சியாபானி( இந்தோநேசியா) ஆகியோர் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment