விக்கி மீது சிவமோகனின் வன்மம்!! அதிர்ச்சியான அறிக்கை!!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, October 25, 2018

விக்கி மீது சிவமோகனின் வன்மம்!! அதிர்ச்சியான அறிக்கை!!!

விக்கி ஒரு நச்சுசெடி அதனை அழித்து தீபாவளி கொண்டாடுவோம் – சி.சிவமோகன்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு நச்சுசெடி அதனை அழித்து தீபாவளி கொண்டாடுவோம் என்று காட்டமாகத் தெரிவித்தார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சிவமோகன். 

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின் அறிவித்தல் சம்பந்தமாக சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சிங்களத்துடன் இரண்டறக்கலந்து, நீதி அரசர் பதவிபெற்று சிங்கள சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளிய, பட்டை வேடதாரியின் வழமையான போலி வணிகத்துடன் தொடங்கிய உரையை நேற்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தமிழினத்தை கூறுபோட்டு உருக்குலைக்க செயல்படும் சிங்கள தேசத்திற்கு சமரசம் வீசும் முன்னாள் முதலமைச்சரின் கட்சியின் முயற்சியே இது .

கட்சி அரசியல் இன்றி தமிழர்களை ஒன்றாக்கி தமிழ் மக்கள் பேரவை ஊடாக சாத்வீக போராட்டம் மூலம் தமிழர் உரிமையை நிலை நாட்டபோகின்றோம் என்று சொன்னவர்களின் சாயம் நேற்றோடு வெளுத்துபோனது.

புத்தியீவிகளாக தம்மை அடையாளம் காட்டி தமிழ் மக்கள் பேரவையூடாக வெகுஜன போராட்டத்தை கட்சி வேறுபாடுகள் இன்றி முன்னெடுக்க இருந்த சந்தர்பத்தையும் தவிடு பொடியாக்கி தடம்புரண்டு வேடதாரியின் புதிய கட்சியில் சங்கமித்த பேரவைக்கு ஒரு வாசகம் சொல்கிறேன். மறத்தமிழனால் ஒதுக்கபட்ட பின் போலி வேசம் போட்டு புதிய கட்சி ஆரம்பித்த பேரவை நேற்றிலிருந்து உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் போது முதலமைச்சர் பூண்டு கொண்ட வேடத்தை தானே கூக்குரலிட்டு தடம்புரண்டு ஆற்றிய உரை அவரது சுய கௌரவத்தை கேள்விக்குறியாக்கி நீங்கள் ஒரு பொய்யன் என்பதை நேற்றைய நாள் பறைசாற்றியுள்ளது.

80 வயதிலும் பதவிவெறிபடித்து தேசியதலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழர் அரசியல் இருப்பான தமிழ்தேசியகூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களத்தால்' சூட்சுமமாக களமிறக்கபட்ட தமிழின துரோகியாக அடையாளம் காட்டியநாள். நேற்றைய நாள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என வரலாறு தமிழருக்கு குறித்து சொல்லும் என்பதை மக்களிற்கு சொல்லிவைக்கிறேன்.

பொறுமையின் விளிம்பிலும் துரோகதனங்களின் எல்லையிலும் கூட்டமைப்பு புதியவிருட்சம் எடுக்கும் என்பதற்கான ஒரு உதாரணமே நேற்றுநடந்த நிகழ்வு.

நேற்று கூறினார் எதிர்பார்பு கூடினால் ஏமாற்றங்களும் அங்கு கூடியிருக்கும் என்று. சாரைசாரையாக மக்கள் கூடுவார்கள் என்று அவரது அமைப்பாளர்கள் சொல்லியபோதும் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்ற ஏமாற்றம் என்பதையா அவர் கூறிநிற்கின்றார்.

99 வருடகால அரசியலைபற்றி பேசினார் அந்த அரசியல் போராட்டத்திலோ,அல்லது ஆயுதபோராட்டதிலோ உங்களது பங்கு எங்கே இருந்தது. இது எனது கேள்வி நீங்கள் சிங்களத்தில் தொங்கி, சிங்களத்தில் நீதி அரசராகி, சொந்த பரம்பரையையே சிங்களத்திற்கு தாரைவார்த்து அங்குதான் பதவிபிரமாணம் எடுப்பேன் என்று கூறி சிங்கள அடிவருடிகளுடன் அதனை செவ்வனே நிறைவேற்றி முடித்த நீங்களா தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுத்து செல்ல போகின்றீர்கள்.

புலிகளின் போராட்டத்தை ஒரு நோயாக தன்னுடைய வாயால் சித்தரித்திருக்கின்றார் அவர்பின்னால் அணிதிரள்வானா மறத்தமிழன் அது ஒருபோதும் நடக்காது.

முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் போட்டியிடுவதை தன்னால் நினைத்தும் பார்க்கமுடியவில்லை என்று நேற்றுகூறியிருந்தார்.எழுதிகொடுத்ததை அப்படியேவாசிப்பது அவரதுவழக்கம்.அனைத்து கட்சிகளும் கேட்டுகொண்டால் மீண்டும் போட்டியிடுவேன் என்று அவர்முன்னம் கூறியதை மறந்துவிட்டார் போல. திட்டமிட்டு கூக்குரலிடுவதற்காக அழைக்கப்பட்டு வந்தவர்கள் இவர் உரையை இடையில் நிறுத்தும் போது கூக்குரலிடுவார்கள் அவர் இவர்களை பார்த்து புன்முறுவல் செய்வார் நல்லதொருநாடகம். சிறந்தஒரு மேடை சினிமாவில் அரசியல் மேடை பேச்சை பார்பது போல உணர்வுதான் எனக்கு ஏற்பட்டது.

கலாசாரத்தை காக்க போவதாக இறுதியில் சொல்கிறார் பாலியல் குற்றவாளி பிரேமாநந்தாவின் சீடனாக இருந்துகொண்டு பாலியல்குற்றம் செய்த பிரேமாநந்தாவின் சீடர்களிற்கு வக்காளத்துவாங்கிய இவர்தான் கலாசாரத்தை காக்க போகிறாரா. யாழ்வந்த மோடியை சந்திக்க இவருக்கு மாத்திரமே கூட்டமைப்பு வாய்ப்பு கொடுத்தது மாவை சேனாதிராசா கூட மேடையில் கீழேதான் இருந்தார்.

அப்படிசேர்ந்து இருந்த சந்தர்பத்தை அரசியல் கைதியின் விடுதலைக்காக இவர் பாவித்திருக்கலாம் அல்லது ராயீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கியுள்ள அப்பாவிகளிற்காக பாவித்திருக்கலாம். மாறாக குற்றசெயல்களில் ஈடுபட்டு கைதுசெய்யபட்டுள்ள பிரேமாநந்தாவின் சீடர்களைவிடுவிக்க கூறி எழுத்துமூலம்வேண்டுகோளை முன்வைத்தார். இந்தபோலிவேசம் தேவையா.வரலாற்று தவறின் அடையாளம் இவர். ஒரு நச்சுசெடி. என்னை பொறுத்தவரை அது வளர்ந்துவருவதற்கு முன்னர் மக்களாக அதனை அழித்து விட்டு தீபாவளி கொண்டாடவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad