ரணிலின் பாதுகாப்பு குறித்து பிரித்தானியா அச்சம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 31, 2018

ரணிலின் பாதுகாப்பு குறித்து பிரித்தானியா அச்சம்!!

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக தாம் அச்சம் கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு செயலர் ஜெறமி கன்ற் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றிய கவலையை வெளியிட்டுள்ளனர். இதனை நாமும் ஏற்றுக்கொள்வதோடு சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தை பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்கவைத்தான் பிரதமர் என கருதுவதாகவும் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டுமாக இருந்தால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலமே பிரதமரை மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தார். எனவே நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி இதற்கு தீர்வுகாணப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad