போர்க்குற்றம் செய்தவர் ஆட்சியா? மு.அமெரிக்க தூதுவர் கவலை 😢 - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 30, 2018

போர்க்குற்றம் செய்தவர் ஆட்சியா? மு.அமெரிக்க தூதுவர் கவலை 😢

சிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது கீச்சகப் பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், "சிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது.

அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார். ஆனால் இப்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.

அவசர இராஜதந்திரம் தேவை – இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad