யாழ் மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார். YARL - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 30, 2020

யாழ் மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றார். YARL


இன்று காலை 9.30 மணிக்கு கூடிய யாழ் மாநகரசபையில், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவேல் ஆனால்ட் போட்டியிட்டார். திடீர் போட்டியாளராக களமிறங்குவதாக மணிவண்ணன் நேற்றிரவு அறிவித்தார்.


தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.


சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.


வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், யாழ் மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர் என கூறப்படும் ஒருவர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.


இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.


கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.


இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad