வயலும் என் வாழ்வும் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 3, 2018

வயலும் என் வாழ்வும்

அண்ணாவிடம் சற்றே தயக்கமாக ...

அண்ணா ! “சைக்கிள்....” என்று தொடங்குகிறேன்

நடந்து போ உடம்புக்கு நல்லம் என்கிறார் .

அப்பா இல்லா நிலையை அம்மா நினைத்திருக்க
வேண்டும் நிறைய ஏமாற்றமும் ஏக்கமும்
வலிகளும் அவளுக்குள் நீண்ட மூச்சு விட்டு
என் முகம் பார்க்கிறாள் பார்வையாலும் மகன்களை
அணைத்துக்கொள்ளும் பாசம்
இந்த அம்மாக்களுக்கு மட்டுமே.

முகநூலில் முகம்புதைத்தபடியே தம்பி கேட்கிறான்
“ நீ எப்படா அண்ணா அப்டேட்(update) ஆகப்போற”

எப்போதும் என் பக்கமிருக்கும் தங்கையே
இந்த விடயத்தில் ஏனோ கைவிரித்து விட்டாள்.



இன்னும் வீட்ட விட்டு வெளிக்கிடலையா?
சூரியன பாத்தா வெயில் சுட்டெரிக்கும் போல
இருக்கு வெயிலுக்கு முதல் போய் பயிருக்கு நீர் பாய்ச்சலாமே’
பக்கத்து வீட்டானின் நக்கலான
எச்சரிப்பு ஆலோசனை வேறு.

இத்தனைக்கும் இரவு பகல் கண்விழித்து
பயிர் விதைத்து வயல் காத்து வந்த பணத்தில் தான்
இவர்களின் பட்டமும் பகட்டு வாழ்வும்.

இப்ப வயலைக் கூறு போட என் வீட்டிலிருந்தே
முப்படை சேனாவுக்கும் முகமது நானாவுக்கும்
விற்றுவிட திட்டம் வேறு

பகட்டுக்கும் பணத்துக்கும் ஆசப்பட்டு
உசுருக்கு பயந்து என் வயல் நிலத்த வித்துப்போட்டு
என் சந்ததி சாப்பிட சோத்துக்கு நான் எங்க போக??

ஒன்பது வருசமாச்சி இடியும் புயலுமா பெஞ்ச அடை மழைல
சேதப்பட்ட வரப்புகள மெல்லச் சரிசெய்து ,
இந்தமுறையும் காடு வெட்டி கொஞ்சமா
நெல் மணிகள் விதைச்சிருக்கேன்.

காலநிலை இப்ப சரியாயிருக்கு
வேளா வேளைக்கு நீர் பாச்சி பசளையிட்டு
யானைத்தொல்லையிருந்து பாதுகாத்து எடுத்திட்டா
மெல்ல மெல்ல எங்கட வயல் மொத்தமும் திருத்தியிருவேன்.

எப்பிடியாவது வயலைக் காத்தே ஆகனும்.
வயலால தான் எங்கட சந்ததிக்கு
வாழ்வு செழிக்கும் என்டதில உறுதி குறையப்போறதில்ல நான்.



இப்ப என் பிரச்சன எல்லாம்
எங்கட வயல எப்படி காப்பாத்தப்போறம் என்டது தான்.

வயல விற்க சமயம் பார்க்கும் என் வீட்டாரிட்ட இனியும் நான் கையேந்தப்போறதில்ல.

வயல் ரொம்ப தூரமாச்சே வசதி ஏதுமில்ல என்னடா செய்றதென்டு யோசிக்கேக்க தான்
அப்பா இருக்கேக்க வீட்டில இருந்த
சைக்கிள் ஞாபகத்தில வந்தது.

வீட்டார் நிராகரிச்சு வீட்டுக் கொல்லையில கிடந்த சைக்கிள

சந்திக்கடை சண்முகத்தாரிடம்
மெல்ல உருட்டிக்கொண்டிருக்குறன்

தடைப்பட்டிருந்த என் பயணத்திற்கு
சைக்கிள் ஒரு உத்வேகத்த தந்திருக்கு.


- குவே -

No comments:

Post a Comment

Post Bottom Ad