வடகிழக்கில் அபிவிருத்தி: சேறு பூசுபவர்களை அம்பலப்படுத்தும் அறிக்கை வெகுவிரைவில்! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 3, 2018

வடகிழக்கில் அபிவிருத்தி: சேறு பூசுபவர்களை அம்பலப்படுத்தும் அறிக்கை வெகுவிரைவில்!

கூட்டமைப்பு எம்பி சுமந்திரனுக்கு என்மீது என்ன கோபமோ, ஏன் கோபமோ எனக்கு தெரியவில்லை. சற்று முன் நடைபெற்று முடிந்த வடகிழக்கு செயலணி கூட்டத்தில் மீண்டும், மீண்டும் என்னை விமர்சனம் செய்ய அவர் முயன்றார்.

என அமைச்சர் மனோகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தமாதிரி என்னிடம் நடந்துக் கொள்ள வேண்டாம் என்பதை இன்று அவருக்கு ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், எம்பிக்கள், அரச அதிகாரிகள் முன்னிலையில் புரிய வைத்தேன் என நினைக்கிறன்.

எனக்கு வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பான புதிய அமைச்சு பொறுப்புகள், சில மாதங்களுக்கு முன்புதான் வழங்கப்பட்டது. இதற்குள்ளேயே பெருந்தொகை நிதியை வட கிழக்கு எம்பீக்களின், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின், எங்கள் அமைச்சின் இணைப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க ஒதுக்கீடு செய்துள்ளேன். பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

கோரிக்கைகளுக்கு நான் அமைச்சர் என்ற முறையில் ஒப்புதல் அளித்ததும், அவை தொடர்பான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை, குறிப்பிட்ட உறுப்பினர்கள், தங்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்களிடமிருந்து பெற்று என் அமைச்சுக்கு அனுப்ப வேண்டும். பாடசாலை என்றால் வலய, மாகாண பணிப்பாளர்களிடமிருந்து பெற்று அனுப்ப வேண்டும். திட்ட மதிப்பீட்டு அறிக்கை வந்ததும் நிதி அனுப்பப்படும். இதுவே அரச நடைமுறை.

இது சுமந்திரனுக்கு தெரியவில்லை. இதனால், எனது அமைச்சு திட்டங்களுக்கு நிதி அனுப்பவில்லை என குறை கூறிக்கொண்டு இருந்தார். அவரது தலைவர் சம்பந்தன் (திருகோணமலை மாவட்டம்) உட்பட பல வடக்கு கிழக்கு எம்பீக்களின், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின், எங்கள் அமைச்சின் இணைப்பாளர்களின், பொதுப்பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு, மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டு, நிதி அனுப்பப்பட்டு வடகிழக்கில் பணிகள் நடைபெறுவதும் அவருக்கு தெரியவில்லை.

இங்கே கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை முரண்பாடுகள் காரணமாகவும், சில வட மாகாணசபை பாடசாலைகளின் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை இன்னமும் எம்மை வந்து சேரவில்லை. அதனால், இன்னமும் சில பாடசாலை பணிகள் ஆரம்பிக்க வில்லை.

இவை எனது அமைச்சின் குறைபாடல்ல. இவை எவரது குறைபாடுகள் என தமிழ் மக்களுக்கு புரிந்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

சொல்லொணா துன்பங்களை சந்தித்துள்ள வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு என்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். அடுத்தவாரம் எனது அமைச்சின் வடகிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் பற்றிய முழுமையான விபரங்களை என் அமைச்சு வெளியிடும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad