அவசரப்பட்டுவிட்ட விக்கி! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 24, 2018

அவசரப்பட்டுவிட்ட விக்கி!

ஆரம்பமே அவசரப்பட்டுவிட்டதைப்போல விக்கினேஷ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு வந்துள்ளது. நிதானமாக திட்டமிட்டு ஆரம்ப கட்ட தயார்படுத்தல்களை செய்து புதிய கூட்டு முன்னணி பற்றிய அறிவிப்பை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவோம் என இருந்த விக்கினேஷ்வரன் அவசரமாக கட்சியின் பெயரையும் அறிவித்தமை ஆச்சரியத்திற்குரியதுதான்.
வட்டுக்கோட்டை பிரகடனம் வரலாற்றில் முக்கியமானது போல, சுதுமலை பிரகடனம் வரலாற்றை எழுதியது போல நல்லூர் பிரகடனமும் வரலாறு ஆகவேண்டும் என யாரோ எடுத்துக்கொடுத்துவிட்டார்கள் போலும்.

வட்டுக்கோட்டையிலிருந்து வந்த வயோதிபர்கள் பலரும் மாலையிட்டு, விக்கினேஷ்வரனின் அரசியல் பிரவேசம் வெற்றியடைய வாழ்த்துவார்கள் என திட்டமிட்டபோதே அதற்கேற்ற மிடுக்குடன் அவசரமாக சில முடிவுகளை விக்கி எடுக்க தள்ளப்பட்டார் என்றே கருதவேண்டியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அனந்தி தனது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு பலரது விமர்சனங்களுக்கும் உள்ளாகவேண்டிவந்தது.
பெண் தலைமைத்துவமாக அவரது வருகை வரவேற்கப்படவேண்டியபோதும் யுஎஸ் கோட்டலில் கூட்டத்தை கூட்டி அவரைத்தவிர இன்னொருவரை அறிமுகம் செய்யமுடியாத கட்சி அறிவிப்பு எதற்காக என்ற கேள்வி எழுந்தது.
அந்த விமர்சனங்கள் ஓயமுன்னரே முன்னாள் முதல்வர் ஆகும் விக்கியரின் அறிவிப்பை நோக்கவேண்டியுள்ளது. தன்னைத்தவிர இன்னொருவரை காட்டமுடியாது கட்சி அறிவிப்பு எதற்காக என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
ஐந்து வருடங்கள் மாகாணசபையை நடத்திய விக்கினேஷ்வரன் தன்னோடு ஒரு சிறு வட்டத்தை கூட அறிவிக்கமுடியாமலும், அல்லது தன்னோடு சேரும் கூட்டு கட்சிகளின் பிரதிநிதிகளையாவது அறிமுகம் செய்யமுடியாத கட்சி அறிவிப்பு எதற்காக என சிந்தித்திருக்கவேண்டும்?
சாதாரணமானவர்களே சிந்திக்கும் இந்த விடயத்தை விக்கினேஷ்வரன் ஏன் சிந்திக்கவில்லை? அல்லது அவருக்கு ஆதரவாக செயற்படும் பேரவையினர் ஏன் இதனை சுட்டிக்காட்டவில்லை? அல்லது அப்படியான கலந்துரையாடல்களை செய்யாமவே தன்னெழுச்சியாக அறிவிப்போம் வருபவர்கள் வரட்டும் என்ற சிந்தனையின் விளைவா?
பொருத்தமான திட்டங்களோடு தமிழ்த் தேசியத்திற்கான கோரிக்கைகளை உண்மையான மனச்சுத்தியோடு முன்னெடுக்கும் எவரையும் வரவேற்போம்.
வரலாறு சரியானவர்களை இனங்காட்டட்டும்!!
பதிவர் - கீதன் இளையதம்பி


No comments:

Post a Comment

Post Bottom Ad