புதிதாய் சிந்திப்போம்! - கேசவராஜன் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 3, 2018

புதிதாய் சிந்திப்போம்! - கேசவராஜன்

இனிப் புதிதாய் சிந்திக்க வேண்டிய நிலையில் தாயகத் தமிழர் உட்பட இலங்கைத் தீவின் அனைத்து மக்களும் உள்ளனர்.
வரலாற்றில் தமிழ்த் தேசம் இலங்கைத் தீவில் முழு நாடாக இருந்ததில்லை.
1833 ஆம் ஆண்டு தான் பிரிட்டிசார் நிர்வாக இலகுவாக்கத்திற்கு இலங்கைத் தீவில் இருந்த அனைத்து தனி இராட்சியங்களையும் ஒன்றாக்கினர்.

அதைப்பற்றிக் குறிப்பிட சம்பந்தன் உட்பட்ட அரசியல் வலதுசாரிகள் விரும்பவில்லை.
ஆனால் இலங்கைத்தீவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும் புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி அதிரடியாகப் பாய வேண்டிய முக்கியமான வரலாற்றுப் புள்ளியில் உள்ளோம்.
தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்டமைப்பில் இருந்து மக்கள் மைய அரசியலை புரட்சியாகப் பாய வேண்டிய காலம் இது.
புதிய மக்கள் நீரோட்டமாக புரட்சி உருவாக வேண்டும்.
கட்சி ரீதியான விரசங்களை விட்டு விலகி உண்மையான மக்கள் அரசியல் நோக்கி நகர வேண்டிய கட்டாயம்.

நரி இடது போனால் என்ன, வலது போனால் என்ன, கடிக்காமல் போனால் சரி என்று பொத்திக்கொண்டிருந்த தன்மையின் விளைவை இன்று காண்கிறோம்.

வேடிக்கை என்னவென்றால் நரி இதுவரை வலதால்  மட்டுமேசென்று கொண்டிருந்தது.

இடது பக்கம் செல்லவே இல்லை.

இடது பேசியவரும் வலதையே செய்தனர்.

உண்மையில் இடதுசாரி அரசியல் செய்தவர்கள் புலிகள் மட்டும் தான்.
அவர்கள் வெளிப்படையாக இடதுசாரியம் பேசவில்லை. 
நடைமுறையில் காட்டினர்.

அதை நாம் புரிந்துகொண்டோமோ இல்லையோ உலகின் ஏகாதிபத்திய ரௌடிகள் புரிந்துகொண்டனர்.

அதனால் தமிழரின் ஆயுதப் பலத்தை நிர்மூலமாக்கினர்.
ஆனால் போராட்டப்பலம் அப்படியே உள்ளது. கோரிக்கைகளும் அப்படியே உறுதியாக உள்ளன.

கோரிக்கைககள் அப்படியே இருப்பதனால் போராட்ட பலமும் உறுதியாகவே உள்ளது.

இருக்கும் சக்தியைப் புதுப்பித்துக் கொண்டு சினேகபூர்வமான சகோதர மக்களையும் சேர்த்துப் போராட வேண்டிய காலகட்டம் இது. 
மரபுவழி அரசியல் சக்திகளை. தூக்கி எறிய வேண்டும்.
திரளுவோம் உறுதிகொண்ட சக்தியாக.

பேய்கள்  பின்வரும் படங்களில் உள்ளது போல் கொண்டாடாலாம்.

ஆனால் பேயோட்டும் சடங்கு ஆரம்பிக்கிறது "தோழர்"களே!

பதிவர் - கேசவராஜன் 

No comments:

Post a Comment

Post Bottom Ad