இரண்டாவது தடவையும் நிராகரித்தார் மைத்திரி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, November 16, 2018

இரண்டாவது தடவையும் நிராகரித்தார் மைத்திரி!!

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். 

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை 12 படிமுறைகள் பின்பற்றவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad