மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும், அதனை வழங்கத் இணக்கம் தெரிவித்துள்ளதால் நாளைய தினம் காலை அவருடன் இணைந்துகொள்ளவுள்ளதாவும் ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி தமிழுக்குத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொள்வதற்கு பேரம்பேசி வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அதற்காக அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள சன்மானங்கள் தொடர்பிலான பட்டியலையும் வெளியிட்டார்.
அத்தோடு எவ்வளவு பேரம் ஒவ்வொருவருக்கும் பேசப்பட்டது எ;னபது முதல் கூட்டமைப்பு முன்னர் பேசிய பேர விபரங்களையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
https://youtu.be/pTy4BKkLYYE
No comments:
Post a Comment