கூட்டமைப்பின் வியாழேந்திரன் அமைச்சரானார்! அடுத்து ச.பவன் ஆயத்தம்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, November 2, 2018

கூட்டமைப்பின் வியாழேந்திரன் அமைச்சரானார்! அடுத்து ச.பவன் ஆயத்தம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் சில அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

அதன்படி எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் கிழக்கில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வருவார் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டதால் கட்சி தாவியதாக வியாழேந்திரன் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad