ஒரு பேரூந்தில் ஒரு வகுப்பறை! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, December 4, 2018

ஒரு பேரூந்தில் ஒரு வகுப்பறை!

பழைய பஸ்ஸினுள் ஒரு வகுப்பறை – மூடுவிழா காணவிருந்த ஒரு பாடசாலையின் வெற்றிக் கதை

மூடிவிடப்படும் அபாயத்தை எதிர்நோக்கிய குருகொட கனிஷ்ட பாடசாலை' தற்போது ஹொரண கல்வி வலயத்தில் புகழ்மிக்க  கிராமிய பாடசாலையாகிவிட்டது.

அஜித் ப்ரேம குமார என்ற அதிபரின் முதல் நியமனத்தைப் பெற்று 2010  ஆம் ஆண்டு இப்பாடசாலைக்கு வந்த போது தரம் ஒன்றில் எந்த ஒரு மாணவரும் சேர்வதற்கு வரவில்லை.

"நான் இந்தப் பாடசலைக்கு வரும்போது 9 ஆசிரியர்களும் 51 மாணவர்களும் மாத்திரமே இருந்தனர்" பீபீசியின் சிங்கள சேவையுடனான சத்திப்பில் குருகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் அஜித் ப்ரேமகுமார குறிப்பிட்டார்.

" அந்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு எந்த பிள்ளைகளும் இருக்க வில்லை. வசதிகள் அதிகமில்லை. முட்டுக் கொடுக்கப்பட்ட கட்ட்டங்கள் காணப்பட்டன. வகுப்பு நடைபெற பொருத்தமான வகுப்பறை இருக்க வில்லை." அதிபர் தனது  ஆரம்ப நாட்களை குறிப்பிட்டார்.

"முதலாவதாக கட்ட்டங்களை திருத்தி பிள்ளைகளுக்கும்  ஆசிரியர்களுக்கும் புதிய எதிர்பார்ப்பை வழங்குவதே எனது எண்ணமாக இருந்த்து"

அனைத்து வகுப்புகளையும் ஒரே கட்ட்டத்தில் நடாத்துவது சிக்கலாக அமைந்த போது அவர் அதற்கு புத்தாக்கமான தீர்வொன்றைக் கண்டுபிடித்தார்.

"ஏனைய நாடுகளில் புகையிரத பெட்டிகளினுள் வகுப்பறை காணப்பட்டதாக நான் படித்துள்ளேன்" அதிபர் ஏனைய பாடசாலைகளிலிந்து குருகொட கனிஷ்ட பாடசாலை வேறுபடும் பஸ் வகுப்பறை ஆரம்பமான கதையை கூறினார்.

நவீன கட்ட்டமொன்றைக் கட்டும் வரையில் வகுப்பை நடாத்துவதற்கு பழைய பஸ் ஒன்றை பயன்படுத்துவது பற்றி அதிபர் அஜித் ப்ரேமகுமார சிந்தித்தார்.

பிறகு அப்போதைய போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஊடாக ஹொரண பஸ் டிப்போவில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பஸ் ஒன்றை தமது பாடசாலைக்குப் பெற்றுக்கொள்வதற்கு செயற்பட்டார்.

"அவ்வாறு கொண்டு வந்த பஸ் வண்டியில் எமக்குத்  தேவையானது போன்று மாற்றங்களைச் செய்து வகுப்பறையாக மாற்றிக்கொண்டோம்"
சமயம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக பஸ் வண்டி வகுப்பு  பயன்படுத்தப்பட்டது.

"மாணவர்கள் மிகுந்த விருப்பத்துடன் பஸ் வகுப்பிற்கு வந்தனர்" தமது மாற்று செயற்பாட்டின் வெற்றி தொடர்பாக அதிபர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த பஸ்ஸின் முன்னால் அழகிய வாசகங்களை எழுதி காட்சிப்படுத்த அவரது பாடசாலை ஆசிரியர்கள் முயன்றனர்.

இந்த பஸ் வண்டி நிறுத்தப்படும் இடங்கள்.
-    பல்கலைக்கழங்கள்
-    கல்வியியல் கல்லூரிகள்
-    சட்டக் கல்லூரி
-    தொழிநுட்பக் கல்லூரிகள்
-    மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள்"

"பஸ்ஸில் ஏறும் எவரும் எங்கும் வழி தவறி இறங்க எந்தச் சந்தர்ப்பமும் இல்லை. பிறப்பிலிருந்து தமது வாழ்வை வெற்றி கொள்ளும் வரையில் தினமும் இவ்வண்டி ஓடும்" என்பனவே அவ்வாசகங்கள்.

தற்போது பஸ் வண்டி வாசிப்பு அறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

"உண்மையாக அந்த பஸ் வகுப்பறை காரணமாக பாடசாலைக்கு அதிகமானோர் உதவினர். அதனால் எமக்கு  கட்ட்டங்கள் வசதிகள் கிடைத்தன." அதிபர் கூறினார்.

தற்போது  குருகொட கனிஷ்ட பாடசாலையில் நவீன கட்ட்டங்களில் 250 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கின்றனர். இம்முறை தரம் ஒன்றிலே 38 மாணவர்கள்  கற்கின்றனர்.
பஸ் வகுப்பறைக்கு மேலதிகமாக அதிபர் அறிமுகப்படுத்தியுள்ள வேறு சில விடயங்கள் காரணமாகவும் பாடசாலை பிரபல்யமடைந்துள்ளது.

"பாடசாலை என்பது கற்றல் வள நிலையமாகும். வகுப்பறையிலிருந்து வெ ளியே வரும் மாணவர்கள் கற்றல் சூழலில் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்."

"நடன அரங்கு,வேலை செய்வதற்கான மேசைகள், குருகொட தொலைக்காட்சி, விளையாட்டு முற்றம், கடிகாரம்,தேசிய உரிமைகள் என்று பல பிரதேசங்களை வேறுபடுத்தி அனைத்துப் பகுதிக்கும் வழங்களை சேகரித்தோம்" அதிபர் விபரித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பதற்கான  திறந்தவெளி வாசிப்பு வலயம் காணப்படுகின்றது. அதில் கூடைகளில் நூல்கள் வகுப்பு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன

"எமது நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் வாசிகசாலை வழங்கிவிட முடியாது. அவ்வாறு முடியாது என்பதற்காக பிள்ளைகளின் வாசிப்பதற்கான  ஆற்றலை வளர்க்காது விட்டுவிட முடியாது. கபட் இல்லை என்று நாம் விட்டுவிடவில்லை"

மழை பெய்யும் போது பிள்ளைகள்  ஓடி வந்து நூல்களை அள்ளிக்  கொண்டுசெல்வர்" அதிபர் விபரிக்கிறார்.

இதற்கு மேலதிகமாக, குருகொட பாடசாலையைப் பார்வையிட வருபவர்களின் பார்வையை எட்டும் இன்னொரு புத்தாக்க சிந்தனை தான் கொங்கிரீட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள  பெரிய தொலைக்காட்சித் திரை. பிள்ளைகள் தொலைக்காட்சிக்குள்  சென்று தமது முன்வைப்புக்களை செய்வதன் மூலம் அவர்களது திறமைகளும் ஆற்றல்களும் விருத்தியடையதை  நோக்கமாக்க இது  கொண்டுள்ளது.

பாடசாலையில் பல்வேறு முன்னின்று செயற்படும் மாணவர்களை பாராட்டும் 'கப்ருக தொரடுவ' என்ற பெயரில் பரிசளிப்பு முறை ஒன்று செயற்பாட்டில் உள்ளது.

"நகரின் இல்லாத சில வசதிகள் எமது பாடசாலையில் உள்ளன. இப்போது இலங்கையில் முதலாவதாக வகுப்பறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வடிவிலான மேசைகள் கதிரைகள் எமது பாடசாலை மாணவர்களுக்கு இங்கு உள்ளது. பாரம்பரிய வகுப்பறையைப் போலவே நவீன வகுப்பறை வசதிகளும் உள்ளன."

இதுவரை இலங்கையின் பல்வேறு பாடசாலைகளில் இருந்து 1194 பேர் குருகொட கனிஷ்ட வித்தியாலயத்தைப் பார்வையிட வருகை தந்துள்ளதாக பதிவு அறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வாறு 8 வருடகாலமாக பாடசாலையின் அபிவிருத்திக்காக உழைத்த அதிபர் அஜித் ப்ரேமகுமார தற்போது சேவை மாற்றம் பெற்று வேறு பாடசாலை ஒன்றுக்குச் செல்கிறார்.

"வசதிகள் இல்லை என்று பின்வாங்க முடியாது. எமக்கு இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு புதிய முறையில் சிந்தித்தால் எமக்கு   எந்த மாற்றத்தையும செய்ய  முடியும்"

"இருந்த நிலையை விட பாடசாலையில் அதிக மாற்றங்களை செய்துள்ளேன். ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக அமையும் விதமாக இதனைக் கட்டியெழுப்பியுள்ளேன்" என்று கூறி உரையாடலை முடித்து வைத்தார் அதிபர் அஜித் ப்ரேம குமார.

No comments:

Post a Comment

Post Bottom Ad