காணாமல் போன 353,தமிழர்களின் பெயர் பட்டியல் வெளியீடு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 25, 2019

காணாமல் போன 353,தமிழர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

இலங்கையில் போரில் இறந்தவர்களை பட்டியலிட, பெயரிட மற்றும் கணக்கிட ITJP மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வு குழுவினால் உலகளாவிய நகர்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இறந்தவர்களின் இறுதி எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும். ஏற்கனவே தொகுக்கப்பட்ட பெயர்ப்பட்டியல்களையும் உள்ளடக்குவதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். இங்கு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் எங்களால் வழங்கப்பட்ட வடிவத்தில் வெளியே சென்று தரவுகளைச் சேகரிக்குமாறு உலகெங்கிலும் உள்ள சமூகஅமைப்புக்களையும் ஆர்வலர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.இதனைவிட இந்த செயற்திட்டம் தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களைக் கொண்ட ஒரு தாளும் உள்ளது.

தகவல்களை ITJP அல்லது HRDAG இற்கு itjpsl@gmail.com அல்லது info@hrdag.org என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

இந்த தகவலை வழங்கியவர் மற்றும் அனுப்பியவர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்பதை தயவுசெய்து குறிப்பிட விரும்புகின்றோம்.

2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை http://www.disappearance.itjpsl.com/#lang=tamil என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் இதுவரை இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad