பதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, June 3, 2019

பதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா!

மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. 

இதன்போது இவ்வாறு இராஜினாமா கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad