அண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக்கிய சில கோரிக்கைகளை முன்வைக்க முடியாதா?
அதற்கு அவர்,
மனோகணேசன் தனது கட்சியில் உள்ள ஆறு எம்பிக்களையும் கூட்டமைப்போடு உள்ள 14 எம்பிக்களையும் இணைத்து பொதுவான கோரிக்கைகளை, பிரச்சனைகளை வெளிப்படுத்த முடியும் என கூறுகிறார்.
ஆனால், தமிழர் தரப்பு அப்படி ஒன்றானால், சிங்கள மக்கள் அச்சப்படுவார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதுபோல முஸ்லிம் எம்பிக்களுடனும் தமிழர்கள் இணைந்து செயற்பட்டால், சிங்கள மக்கள் பீதியடைவார்கள் என்ற நிலையே உள்ளது.
அதற்கு உதாரணமாக முஸ்லிம் தலைவர்கள் தமது அமைச்சுபதவியை ராஜினாமா செய்தபோது, அதனை சிங்கள மக்களில் பெரும்பகுதி அந்த வகையிலேயே பார்த்தது.
எனவும் சுமந்திரன் அதற்கு விளக்கமளித்தார்.
இங்கு கேள்வி என்னவெனில், இத்தகைய சிந்தனைபோக்குள்ள கூட்டமைப்பு தலைமையின் இத்தகைய அணுகுமுறை சரியானதா?
இப்படியானவர்கள் தமிழர் தரப்பின் உரிமை கோரிக்கையை பற்றிய விடயத்தில் தவறாகவே அணுகுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தவில்லையா?
இன்று அதே முஸ்லிம் தரப்பு மீளவும் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். ஆனால் தமிழர் தரப்போ, ஒருமித்த சிந்தனையின்றி, தாம் ஒரு தேசமாக சிந்திக்க வேண்டும் என்ற சிந்தனையின்றி, கிரவல் வீதி போடுவதே பெரிய விடயம் என சொல்கின்றனர்.
இதனால்தான் வடக்கு கிழக்கு தழுவிய எந்த வகையான செயல் திட்டங்களையும் கூட்டமைப்பு முன்னெடுக்காமல், சிங்கள தேசத்துடன் கரைந்துவிட முயற்சிக்கிறதா?
தமிழர்கள் தாம் ஒரு தேசமாக சிந்தனை செயற்பாட்டை வளர்த்துக் கொள்ளாதவரை, தாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே!!
No comments:
Post a Comment