இந்திராகாந்தி புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததால் பிரித்தானியாவின் கினிமினி இங்கு வந்தது - ரணில் ranil - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, December 21, 2020

இந்திராகாந்தி புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததால் பிரித்தானியாவின் கினிமினி இங்கு வந்தது - ரணில் ranil

Sultan Qaboos of Oman attends the Sovereign’s Parade at the Sandhurst Academy in England, April, 1983. Photograph: Keystone/Getty

 கினிமினி ஒரு கூலிப்படையில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கையில் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை மாத்திரம் வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார். இலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சண்டே டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


கேள்வி: இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்- முதலில் பிரித்தானியாவில் அடிமைத்தனம் மற்றும் தொடரும் கூலிப்படைகள் குறித்த விபரங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இலங்கையில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படைகள் பற்றிய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமை அதன் ஒரு பகுதியே. இரண்டாவது இந்த நூலை எழுதியவர் குறிப்பிட்ட காலம் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் இணைந்து செயற்பட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் 2011 இல் அவர் வடக்குகிழக்கிற்குச் சென்றதாக தெரிவிக்கின்றார். ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு சென்றதாக அவர் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதை விட அவர் தன்னுடைய தகவல்களை அதிகளவிற்கு நூல்கள் ஆவணங்கள் கோப்புகளில் இருந்தே பெற்றுள்ளார். கினிமினி பலநாடுகளில் பணியாற்றியதால் அவர் கினிமினி குறித்த தகவல்களை பிரித்தானியாவி;ன் வெளிவிவகார ஆவணங்களில் இருந்து பெற முயல்கின்றார். பிரிட்டனின் தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் அவர் இலங்கை குறித்த விபரங்களையும் பெற முயலக்கூடும். இது தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் போல தோன்றுகின்றது. ஆனால் கேஎம்எஸ் அமைப்பிற்கு பிரிட்டிஷ் அரசாஙகத்துடன் எந்தத் தொடர்புமில்லை. இலங்கையில் கினிமினி குறித்து நூலை எழுதியவர் சமீபத்தில் தமிழ் கார்டியனிற்கு பேட்டியொன்றை வழங்கினார். நான் அவரது நூலில் சில முரண்பாடுகளைப் பார்த்துள்ளேன். பொதுமக்கள் மத்தியிலிருந்து தகவல்களைப் பெற்றமை குறித்தே அவர் தெரிவித்துள்ளார் இதன் அர்த்தம் என்னவென்றால் அவர் அதிக ஆராய்ச்சிகளில் ஈடுபடவில்லை. 

கேள்வி- கினிமினி சேவை பிரிட்டனின் ஆதரவுடனேயே இலங்கையில் செயற்பட்டது என்பது இரகசியமான விடயமில்லை – அவ்வேளை விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்த இந்தியாவை மனம்நோகச்செய்ய விரும்பாததால் பிரிட்டன் அவ்வாறு செயற்பட்டது? 

பதில்- கினிமினி ஒரு கூலிப்படையில்லை, அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்பட்டனர்.பயிற்சி வழங்குவதே அவர்களிற்கான ஒப்பந்தம். இதன்காரணமாக அவர்கள் கூலிப்படைகள் என்பது பொருத்தமானதில்லை. அரசாங்கம் யாருடனாவது போரிடுவதற்காக அமர்த்துவதே கூலிப்படை. கினிமினியைச் சேர்ந்தவர்கள் கட்டுக்குருண்ட முகாமில் பயிற்சிகளை வழங்கினார்கள். அங்கே விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது,ஏனையவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு மதுருஓயாவை இராணுவம் பயன்படுத்தியது.அங்கும் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதுதவிர விமான ஓட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் இது குறித்து அறிந்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் கினிமினியுடன் தனது சொந்த உடன்படிக்கையை செய்திருந்தது. கினிமினிசேவை பிரிட்டனில் நன்கு அறியப்பட்ட ஒன்று இதனை பல நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் பணியாற்றி வருகின்றன. ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இலங்கையில் அவர்களது செயற்பாடுகள் குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் எங்களிற்கு பிரிட்டனின் அனுமதியோ ஆசீர்வாதமோ எங்களிற்கு தேவைப்படவில்லை.நாங்கள்அதனை கேட்கவுமில்லை. நாங்கள் கினிமினி சேவையுடன் மாத்திரம் இணைந்து செயற்படவில்லை வேறு அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட்டோம். உண்மையில் இராணுவத்தின் மோதலில் ஈடுபடும் படைப்பிரிவினருக்கு பாகிஸ்தான் அதன் பல்வேறு அமைப்புகளில் பயிற்சியை வழங்கியது. பாகிஸ்தானின் விசேட படைப்பிரிவின் பிரிகேடியர் அனுபவமிக்க குழுவொன்றின் ஆலோசனைகள் எங்களுக்கு கிடைத்தன. ஆனால் இறுதியில் அனைத்து தந்திரோபாயங்களையும் எங்கள் இராணுவமே உருவாக்கியது. 

Sultan Qaboos of Oman attends the Sovereign’s Parade at the Sandhurst Academy in England, April, 1983. Photograph: Keystone/Getty



 கேள்வி- ஆனால் பாகிஸ்தானின் ஆதரவு அந்த நாட்டின் அரசாங்கத்தின் மூலம் கிடைத்தது? 

 பதில்- ஆம் இராணுவரீதியிலான ஆதரவு பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் கிடைத்தது. நாங்கள் படையினரை அங்கு அனுப்பினோம்.அவர்கள் இங்கு வந்து எங்களிற்கு பயிற்சி வழங்கவில்லை. எங்களிற்கு இஸ்ரேலிடமிருந்தும் புலனாய்வு ஆதரவும் பயிற்சியும் கிடைத்தது. எங்கள் படையினரும் தென்னாபிரிக்காவிற்குச் சென்றனர் அங்கிருந்தும் இலங்கைக்கு பலரை இங்கு வரச்செய்தோம். இந்திய அரசாங்கம் எங்களிற்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரோபாயத்தை பின்பற்றியது. பிரிட்டன் இலங்கையில் பயிற்சிகளை வழங்குகின்றது என இந்திய அரசாங்கம் முறைப்பாடு செய்தது,இந்திய இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது. எனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது இந்திய வெளிவிவகார செயலாளர் ரொமேஸ் பண்டாரிக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்ன சொன்னார் என்பது தற்போதும் எனக்கு நினைவிலிருக்கின்றது. இந்திராகாந்தி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்திருக்காவிட்டால் எங்களுக்கு கினிமினியின் உதவி தேவைப்பட்டிருக்காது என ஜேஆர் ரொமேஸ் பண்டாரியிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad