இரண்டும் கெட்டான் நிலை - பி. மாணிக்­க­வா­சகம் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 11, 2018

இரண்டும் கெட்டான் நிலை - பி. மாணிக்­க­வா­சகம்

மாற்­றங்­களினூடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும். நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதனூடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தே சிறந்த வழி­மு­றை­யாகும். எனவே, மாற்­றங்­க­ளின்றி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யாது. மாற்­றங்­க­ளின்றி நல்­லி­ணக்கம் ஏற்­பட முடி­யாது. நல்­லு­றவும் இன ஐக்­கி­யமும் நிலை­யான சமா­தா­ன­மும்­கூட சாத்­தி­ய­மில்லை. 
இந்த வகை­யில்­தானோ என்­னவோ அர­சி­ய­ல­மைப்பை மாற்றியமைப்­பதினூடாக  பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணு­கு­மு­றையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. 
நடை­மு­றையிலுள்ள அரசி­ய­ல­மைப்பை முழு­மை­யாக மாற்றியமைப்­ப­தற்­கான நோக்­கங்கள் ஒருமுக­மா­ன­வையா என்­பதில் தெளி­வில்லை. அது கேள்­விக்­கு­றிக்கு உரி­யது என்­று­ கூட கூறலாம். 
பல தசாப்­தங்­க­ளாகத் தீர்வு காணப்­ப­டாத கார­ணத்­தால் நாட்டில் இனப்­பி­ரச்­சினை புரை­யோடிப் போயி­ருக்­கின்­றது. அர­சியல் தளத்தில் இந்தப் பிரச்­சினை ஆழ­மான இன முறு­க­லாக உரு­மாற்றம் பெற்­றி­ருக்­கின்­றது. சிறு­பான்மை தேசிய இனத்தின் அர­சியல் உரி­மை­களைப் பங்­கிட்டுக் கொள்­வ­தற்கு பேரி­ன­வா­தி­க­ளுக்கு விருப்­ப­மில்லை. 
இந்த நாடும் இந்த நாட்டின் ஆட்சி உரி­மை­களும் அர­சியல் மய­மான மதக் கொள்­கையும் தனக்கு மட்­டுமே சொந்­த­மா­னவை என்ற ஆழ­மான மனப்­பாங்கில் பெரும்­பான்மை இனம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த அர­சியல் உள­வியல் நிலைப்­பா­டா­னது வெறு­மனே பேரின அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் மட்­டு­மல்­லாமல் பெரும்­பான்­மை­யி­னத்தின் சாதா­ரண மக்­க­ளு­டைய மனங்­க­ளிலும் ஆழ­மாக வேரூன்றச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலைமை மோச­மா­னது, ஆபத்­தா­னது என்­பதை மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சி­களின் வர­லாற்றுச் செயல்­மு­றைகள் அனு­பவ ரீதி­யாக  உணர்த்­தி­யி­ருக்­கின்­றன. 
நவீன ,விஞ்­ஞான தொழில்­நுட்பம் வளர்ச்­சி­ய­டைந்து சமூக, பொரு­ளா­தார, அர­சியல் துறை­களில் உலக ஒழுங்கு முறை பல மாற்­றங்­க­ளுக்குள்­ளாகி வளர்ச்­சி­ய­டைந்­துள்ள போதிலும் அந்த உலக நீரோட்­டத்தில் இலங்கை இணை­ய­வில்லை என்றே கூற வேண்டும். இதன் கார­ண­மா­கவே மனித உரி­மைகள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட நடை­மு­றைகள் என்­ப­வற்றை உலக ஒழுங்­குக்கு அமை­வாகச் செயற்­ப­ட அது மறுத்து வரு­கின்­றது. 
இலங்­கையின் ஆட்சியுரிமை என்­பது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் மாத்­தி­ரமே பரம்­பரைச் சொத்­தாகப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தக் கட்­சி­களே மாறி – மாறி ஆட்சி நடத்தி வரு­கின்ற போக்கு இந்த அர­சியல் சொத்துரிமைப் போக்கை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த இரண்டு கட்­சி­களும் தனித்­த­னியே தமது செல்­வாக்­குக்கு ஏற்ற வகை­யிலும் தமது கட்­சியின் எதிர்­கால சுய­ந­லன்­களின் அடிப்­ப­டை­யிலும் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மாற்றி எழு­தி­யி­ருக்­கின்­றன. 
அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் 1978 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியும் இரு­வேறு சந்­தர்ப்­பங்­களில் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக மாற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­யி­ருந்­தன. ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து 1948 ஆம் ஆண்டு இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்­தது. சுதந்­திர நாடாக, பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­யத்தின் ஓர் அங்­க­மாக அதன் முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 
பிரித்­தா­னிய ஏகா­தி­யத்­தி­யத்தில் கட்­டுண்­டி­ருந்த இலங்­கையை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி 1972 ஆம் ஆண்டு உரு­வாக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் குடி­ய­ர­சாக மாற்­றி­ய­மைத்­தது. அதற்குப் பின்னர் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய ஐக்­கிய தேசியக் கட்சி 1978 ஆம் ஆண்டு  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­யது. அந்த வகையில் ஜன­நா­யக சோஷ­லிசக் குடி­ய­ர­சா­கிய இலங்­கையில் 3 தட­வைகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  
ஐக்­கிய தேசியக் கட்­சி­யால் உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு கடந்த 40 வரு­டங்­களில் 19 தட­வைகள் திருத்தம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. தொடர்ந்து 20 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை, தற்­போது 4 ஆ­வது தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  
முன்­னைய நட­வ­டிக்­கை­களைப் போன்று அல்­லாமல் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உரு­வாக்­கிய இரு­ கட்சி அரசு அல்­லது கூட்டு அர­சாங்­கத்தின் கீழ் இந்த இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.   
எல்லை கடந்த அதி­காரப் பிர­யோகம்
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்­சியின் பிதா­ம­க­ரா­கிய ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும் அவ­ருக்குப் பின்னர், மஹிந்த ராஜ­பக் ஷவும் அந்த ஆட்சி முறையின் உச்­சக்­கட்ட அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்திச் செயற்­பட்­டி­ருந்­தனர். ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் பின்னர் பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா பண்டாரநாயக்க குமா­ர­­துங்க ஆகியோர் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­க­ளாகப் பதவியேற்­றி­ருந்த போதிலும் அந்தப் பத­வியின் உச்­ச­க்கட்ட அதி­கார பலத்தை அவர்கள் பிர­யோ­கித்­தி­ருக்­க­வில்லை. 
ஆனால், ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­விலும் பார்க்க பல படிகள் முன்­னேறிச் சென்று ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கார பலத்தை மஹிந்த ராஜ­பக் ஷ பயன்­ப­டுத்தி இருந்தார். அவ­ரு­டைய அதி­காரப் பிர­யோக நட­வ­டிக்­கைகள் எல்லை மீறிய வகையில் காணப்பட்டன. அத்துடன் அந்தப் பத­விக்கு மேலும் அதி­கார பலத்தை சேர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் துணிந்து மேற்­கொண்­டி­ருந்தார். 
அவ­ரு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் கொண்டு வரப்­பட்ட 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதியொருவர் எதேச்­ச­ாதி­காரப் போக்கில் காலடியெடுத்து வைப்­பதைத் தடுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த அர­சி­ய­ல­மைப்புச் சட்ட விதிகள் மாற்றியமைக்­கப்­பட்­டன. 
இரண்டு தட­வைகள் மட்­டுமே ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்க முடியும் என்ற அர­சி­ய­ல­மைப்பு விதியை இரண்டு தட­வை­க­ளுக்கு மேலேயும் பதவி வகிக்க முடியும் என்று திருத்தச் சட்­டத்தின் மூலம் மாற்­றி­ய­மைத்து 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாத ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் கள­மி­றங்­கி­யி­ருந்தார். அதே­நேரம் வெல்ல முடி­யா­தது எனக் கரு­தப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் அவர் அடைந்த வெற்­றியை அர­சியல் முத­லீ­டாக்கி தனது குடும்பச் செல்­வாக்கை அர­சியல் அதி­கார பலத்தில் நிலை­நி­றுத்­து­வ­தற்­கான சுய­ அ­ர­சியல் இலாப நட­வ­டிக்­கை­க­ளையும் அவர் முன்­னெ­டுத்­தி­ருந்தார். 
ஜன­நா­யகக் குடி­ய­ரசு என்ற அர­சி­ய­ல­மைப்பின் தத்­துவம் இதன்மூலம் தகர்க்­கப்­பட்டு எதேச்­சா­தி­காரப் போக்கு தலை­யெ­டுத்­தி­ருந்­தது. இதற்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்த ஜன­நா­யக சக்­திகள் ஆட்சி மாற்­றத்­துக்கு வித்­திட்­டி­ருந்­தன. அந்த வகை­யி­லேயே எதிரும் புதி­ரு­மான ஆட்சி அர­சியல் போக்கைக் கொண்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் மூலம் ஆட்சியமைத்­தன. அந்தக் கூட்­டாட்­சியே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. 
  இணக்­க­மில்­லாத அர­சியல் களம்
புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு பேரின அர­சி­யல்­வா­திகள் ஒரு நோக்­கத்­தையும் சிறு­பான்மை அரச தலை­வர்கள் வேறொரு நோக்­கத்­தையும் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இரு தரப்­பி­னரும் ஏக­ம­ன­தான தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் இந்த மாற்­றத்தை நோக்கி அடி­யெ­டுத்து வைக்­க­வில்லை. 
இரு தரப்­பி­ன­ரும் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்க வேண்டும் என்ற பொது­வான நோக்­கத்தைக் கொண்­டி­ருந்­தாலும் பேரின அர­சியல் தலை­வர்கள் ஜனா­தி­பதி ஆட்சி முறையை இல்­லாமல் செய்ய வேண்டும், தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்டு வர வேண்டும் என்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சிற­ுபான்மை இன மக்­களின் சார்பில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தையே முக்­கிய நோக்­க­மாகக் கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­துள்­ளார்கள். 
பேரின அர­சி­யல்­வா­திகள் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரு­வ­தற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுக்­கின்­ற­போது அச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அர­சி­ய­ல­மைப்பினூடாக இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­பதே தமிழ் அர­சியல் தலை­வர்­களின் விருப்பமாகும். ஏனெனில் ஒற்­றை­யாட்சி முறையை  அடிப்­ப­டை­யாகக் கொண்ட நடை­முறை அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்ட நிலையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு வாய்ப்­பில்லை என்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். 
சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மையின் கீழ் ஆட்சி அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்­பது தமிழ்த் தலை­வர்­களின் நிலைப்­பா­டாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வதன் மூலமே இந்த மாற்­றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்­ப­டையில் அவர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு உற்­சா­க­மான ஆத­ரவை வழங்­கி­யி­ரு­கின்­றார்கள்.
ஆட்சி மாற்­றத்­துக்குப் பேரு­தவி புரிந்த தமிழ்த் ­த­லை­வர்­க­ளுக்குக் கைமா­றாக புதிய அர­சி­ய­ல­மைப்பினூடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வைக் காணலாம் என்­பது பேரின அர­சி­யல்­வா­தி­களின் இணக்­கப்­பாடு. ஆனால், அந்த அர­சியல் தீர்வு எப்­ப­டி­யா­னது என்­பதில் இரு­த­ரப்­பினருக்குமிடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் இரு தரப்­பி­னரும் எட்­டாத தொலை­வி­லேயே இருக்­கின்­றனர். 
ஒற்­றை­யாட்சி முறைமை மாற்­றப்­பட வேண்டும். சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இறை­மை­யுடன் கூடி­ய­தாக அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழர் தரப்பின் கோரிக்கையாகும். ஆனால் சமஷ்டி என்ற பேச்­சுக்கே இட­மில்லை.  ஒற்­றை­யாட்­சியை ஒரு­போதும் மாற்ற முடி­யாது என்­பது பேரின அர­சி­யல்­வா­தி­களின் நிலைப்­பாடாகும். இரண்டு நிலைப்­பா­டு­க­ளுக்குமிடையில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கின்­றது. இந்த இடை­வெ­ளியைக் கடந்து இரு ­த­ரப்­பி­னரும் ஒன்­றி­ணை­வதனூடா­கத்தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்­கு­ரிய மாற்­றத்தைக் காண முடியும். 
இந்த நிலை­மைகள் ஒரு­பு­ற­மி­ருக்க புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு இணக்­கப்­பா­டான ஓர் அர­சியல் களம் காணப்­ப­டு­கின்­றதா என்­பதும் கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. இணைந்த ஆட்­சியை உரு­வாக்­கும்­போது இரண்டு கட்­சி­க­ளி­னதும் தலை­வர்­க­ளிடம் காணப்­பட்ட ஒன்­றி­ணைந்த செயற்­பாட்­டுக்­கான அர­சியல் மன­நிலை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முக்­கி­ய­மான முடி­வு­களை மேற்­கொள்­கின்ற இச் சந்­தர்ப்­பத்தில் காணப்­ப­ட­வில்லை. மாறாக முரண்­பா­டான அர­சியல் களத்திலிருந்தே அந்த முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டிய சூழல் நில­வு­கின்­றது. 
இரண்டு கட்­சி­களும் இணைந்து தோற்­க­டித்த மஹிந்த தரப்­பினர் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெற்­ற­வர்­க­ளாக எதிர்வரும் தேர்தல் பந்­த­யத்தில் முன்­ன­ணியில் திகழ்­வ­தற்­கான அர­சியல் கள அறி­கு­றி­களே காணப்­ப­டு­கின்­றன. 
அடுத்து நடை­பெ­ற­வுள்ள மாகா­ண­சபைத் தேர்­தலும் அதனைத் தொடர்ந்து நடை­பெற வேண்­டிய ஜனா­தி­பதி தேர்­த­லுடன் பொதுத் தேர்­தலும் இரு தரப்­பி­ன­ரையும் அர­சியல் ரீதி­யான பதற்ற நிலை­மைக்கே தள்­ளி­யி­ருக்­கின்­றது. 
தேர்தல் பர­ப­ரப்பில் தீர்வு முயற்­சிகள்
இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தென்­பது அர­சியல் ரீதி­யாக மிகுந்த பொறுப்­பு­மிக்க பணி­யாகும். அதற்கு முதலில் நிதா­னமும் அர­சியல் விட்­டுக்­கொ­டுப்­புக்­கு­ரிய தன்­மையும் இணக்­கப்­பாட்­டுடன் கூடிய பரஸ்­பர நம்­பிக்கை மிகுந்த மனநிலையும் அவ­சியம். ஆனால், அர­சியல் தீர்­வுக்­கான புதிய அர­சி­ய­மைப்பை உரு­வாக்­கு­கின்ற பணியில் முக்­கிய முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டிய தரு­ணத்தில் அத்­த­கைய சூழல் காணப்­ப­ட­வில்லை. 
கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லிலும் தொடர்ந்து வந்த பொதுத் தேர்­த­லிலும் படு­தோல்­வியைத் தழு­விய மஹிந்த ராஜ­பக் ஷ 3 ஆண்­டு­களில் அர­சியல் பலம் வாய்ந்­த­வ­ராக மக்கள் மத்­தியில் மீள் எழுச்சி பெறுவார் என்று கூட்டு அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. 
ஆட்சி அதி­கா­ரத்திலுள்ள கூட்­டுக்­கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் ஐக்­கிய தேசிய கட்­சி­யையும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அவர் மண் கௌவச் செய்­த­தை­ய­டுத்து இந்த இரண்டு தலை­வர்­களும் அதிர்ச்­சியில் உறைந்து போனார்கள். "அடுத்­த­டுத்த தேர்­தல்­களில் தங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்­ன­வாகும்..? என்­ன­வாகப் போகின்­றது..?" என்ற அர­சியல் ரீதி­யான அச்­சத்­துக்கும் அவர்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். 
ஆட்சி மாற்­றத்­துக்­கான தேர்­தலின் போது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை அவர்கள் நிறை­வேற்றத் தவ­றி­விட்­டார்கள். குறிப்­பாக ஊழல்­களை ஒழித்து ஊழல் செய்­த­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­துவோம் என்ற வாக்­கு­று­திக்கு முர­ணாக நல்­லாட்­சியில் உள்­ள­வர்­களே மோச­டி­க­ளிலும் ஊழல்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்று வெளி­யா­கிய தக­வல்கள் அவர்­களை ஆத­ரித்த மக்­களை அதி­ருப்­தி­ய­டை­யவும் வெறுப்­ப­டை­யவும் செய்­துள்­ளது. 
"எரி­கின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வ­து ­போன்று" நல்­லாட்சி அர­சாங்கம் என்ற கூட்­டாட்சி அர­சாங்கம் சிறு­பான்மை இன மக்­க­ளுடன் நட்புக்கொண்டு செயற்­ப­டு­வ­தாக மஹிந்த ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்த பிர­சா­ரமும் சிங்­கள மக்­க­ளு­டைய இந்த உணர்­வுக்கு மேலும் உர­மூட்டி அரசு மீது வெறுப்­ப­டையச் செய்­துள்­ளது.
அதே­நேரம் ஆட்சி மாற்­றத்­துக்கும் அதன் பின்­ன­ரான சூழ­லிலும் நிபந்­த­னை­யற்ற முறையில் அர­சுக்கு ஆத­ரவு வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தாக அளித்த வாக்­கு­று­தி­களை அரசு நிறை­வேற்­றாத கார­ணத்­தால் அர­சியல் ரீதி­யான தனது ஏமாற்­றத்­தையும் எரிச்­ச­லையும் பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­விட்­டது. 
மறு­பு­றத்தில் நியா­ய­மான முறையில் தமது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பார்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் மீது நம்­பிக்கை கொண்­டி­ருந்த தமிழ் மக்­களும் பெரும் ஏமாற்­றத்­துக்குள்­ளாக்­கப்­பட்டு அதனால் அவர்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கையிழந்­துள்ள நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது. 
மும்­முனை போட்­டி­யுள்ள ஒரு தேர்தல் களத்தில் இரு­வேறு தரப்­புக்­க­ளாகக் கள­மி­றங்கத் தய­ாராகிக் கொண்­டி­ருக்­கின்ற ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் தலை­வர்­க­ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஓர் இக்கட்டான அரசியல் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். 
தங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடிய சிறுபான்மை இன மக்களைத் தங்கள் பக்கத்தில் தக்க வைத்துக் கொள்கின்ற அதேவேளை சிறுபான்மையினருடன் தாங்கள் அரசியல் சிநேகம் கொண்டிருக்கின்றோம் என்ற தமது அரசியல் நலன்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டிலுள்ள சிங்கள மக்களுடைய மனங்களை வெல்லவேண்டிய கட்டாய நிலைமைக்கும் அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள்.
"ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம்.. இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.." என்ற சங்கடமான ஒரு நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். 
இத்தகைய ஒரு நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத்தக்க அம்சங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயார் செய்வது இலகுவான காரியமல்ல. 
எதிர்க்கட்சிப் பதவியைக் கொண்டிருந்த போதிலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அரசுக்கு உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நேரடியாகவும் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளினூடாகவும் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்த அழுத்தங்களுக்குட்பட்டு தேர்தல் அரசியல் ரீதியான பதற்றமான ஓர் அரசியல் கள நிலைமையில் இனப்பிரச்சினைக்கு மிகுந்த பொறுப்போடு, நிதானத்துடன் கூடிய, அரசியல் விட்டுக்கொடுப்புக்குரிய இணக்கப்பாட்டுடன் பரஸ்பர நம்பிக்கைக்குரிய மனநிலையில் அரசியல் தீர்வுக்குரிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அரச தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுப்பார்களா, முன்னெடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. 

No comments:

Post a Comment

Post Bottom Ad