ஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி) - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 11, 2018

ஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில் என ஒவ்வொரு நாளில் ஒருவரின் பிறந்தநாளை வெவ்வேறு இடங்களில் கொண்டாடுகின்றார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோதே சயந்தன் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மையில் ஒருவரின் பிறந்தநாளுக்காக 25 படகுகளை வாடகைக்கு அமர்த்தி யாழ்ப்பாணத்திற்கு அண்மையாக உள்ள தீவு ஒன்றில் 300 பேர் வரை கூடி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

பிறந்தநாளுக்கான கேக்குடன் வாளை குறுக்காக குத்தி கேக் வெட்டி படமெடுத்துள்ளனர்.எனவே இவற்றை இலகுவாக விசாரித்து இந்த பிரச்சனைக்குரியவர்களை கண்டுகொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்போது குறுக்கிட்ட இன்னொரு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தப்பிரச்சனைக்கு உடனடியாக பொலிசாரால் தீர்வுகாணமுடியாது எனவும் ஆனால் அதிமேதகு ஜனாதிபதிக்கும் கௌரவ பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்தி தீர்வுகாணுமாறும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad