அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் ISIS தாக்குதல் சதிக்காக அவுஸ்திரேலியாவில் கைது! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 31, 2018

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் ISIS தாக்குதல் சதிக்காக அவுஸ்திரேலியாவில் கைது!


அவுஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக் கழக தகவல் தொழில்நுட்பத் துறை மாணவனான இலங்கையைச் சேர்ந்த 25 வயதான நிலார் நிஸாம்தீன் முஹமட் கமர் ISIS பயங்கரவாத அமைப்புடன் இணைந்து அவுஸ்திரேலியாவின் முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய நபர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தகவல்களை சேகரித்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டுப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டு இருக்கின்றார். 


இவரிடமிருந்து கைப்பற்றப் பட்டுள்ள குறிப்புக்களில் இவர் ISIS அமைப்பின் கொள்கைகளுடன் தொடர்புள்ளவர் என்பது புலனாகியுள்ளதாக அவுஸ்திரேலிய போலீசாரை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இவர், முன்னாள் இலங்கை வங்கித் தலைவரான காலம் சென்ற சட்டத்தரணி ஜெஹான் கமர் காஸிம் அவர்களின் பேரனும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் மருமகனும் ஆவார். இவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறும்.

-றிஷ்வின் இஸ்மத்
2018.08.31

No comments:

Post a Comment

Post Bottom Ad