தீவிரமான தமிழ்த்தலைமை உருவாகும் வாய்ப்பு வரும்! தவிர்க்குமாறு மோடியிடம் சம்பந்தன் கோரிக்கை!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 11, 2018

தீவிரமான தமிழ்த்தலைமை உருவாகும் வாய்ப்பு வரும்! தவிர்க்குமாறு மோடியிடம் சம்பந்தன் கோரிக்கை!!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சம்பந்தன் மோடியிடம் வலியுறுத்தல்

முயற்சி தோல்வியில் முடிவடைந்தால் வடக்கு, கிழக்கில் தீவிரப்போக்கைக் கொண்ட தலைமை உரு­வாவதற்கும் வாய்ப்பு ¤ சம்பந்தன்

அர­சி­ய­ல­மைப்­புக்­கான முயற்­சி­, 13ஆவது திருத்­தத்தை   அமு­லாக்கும் விட­யம்  சமாந்­த­ர­மாக  முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வேண்டும். ¤ மனோ



இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­வி­பு­ரி­ய­வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும்


எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வா­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­படும் என்றும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். .

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய எம்.பிக்கள் குழு உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இந்­தி­யா­விற்கு சென்­றுள்­ளது. இந்­தக்­கு­ழுவில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி.யின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத், அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா, கயந்த கரு­ணா­தி­லக்க ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

இந்­தக்­குழு நேற்­றுக்­காலை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. இந்­தப்­பேச்­சு­வார்த்­தை­யின்­போதே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த சம்­பந்தன்;

இன்­றைய அர­சி­ய­ல­மைப்பில் தாங்கள் இந்த நாட்டின் பிர­ஜைகள் என்­பதை உணர்­வ­தற்­கான வாய்ப்­பில்­லாமல் இருக்­கின்­றது. ஆனால் நாம் இலங்­கையர் என்ற உணர்வை விரும்­பு­கின்றோம். அந்த வாய்ப்பை மறுக்கும் வகை­யி­லேயே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு இருக்­கின்­றது. இத­னால்தான் நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம். புதிய அர­சி­யல்­யாப்பின் உரு­வாக்­கத்­திற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான அழுத்­தங்­க­ளையும் ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­க­வேண்டும். இதன்­மூ­ல­மா­கவே இலங்­கையில் தமிழ் மக்கள் நல்­வாழ்வை வாழ­மு­டியும். இந்த அர­சி­ய­ல­மைப்பின் உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் இலங்­கையில் அரா­ஜகம் ஏற்­படும்.

அது­மட்­டு­மல்ல வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வா­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­படும். இன்று வயது முதிர்ந்த நிலையில் நான் இருக்­கின்றேன். தற்­போ­தைய நிலையில் உங்­க­ளிடம் நான் இந்­தக்­கோ­ரிக்­கையை விடுக்­கின்றேன். ஆனால் இந்­தக்­கோ­ரிக்­கையை நீங்கள் ஏற்­காது விட்டால் நாளை என்னால் சமா­ளிக்­க­மு­டி­யாத புதி­ய­தொரு போக்கு வடக்­கிலே ஏற்­பட்­டு­விடும் என்று நான் அஞ்­சு­கின்றேன்.

2014ஆம் ஆண்டு நீங்கள் இந்­தியப் பிர­த­ம­ராக ஆட்­சி­பீடம் ஏறி­யி­ருந்­தீர்கள். நீங்கள் இரண்டு தட­வைகள் இலங்­கைக்கு வந்­த­போதும் கூட நாங்கள் உங்­க­ளிடம் கோரிக்­கை­களை விடுத்­தி­ருந்தோம். இந்த சந்­தர்ப்­பத்­திலும் அந்தக் கோரிக்­கை­களை மிகவும் ஆழ­மாக வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன். புதிய அர­சி­ய­ல­மைப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும்.

 இந்­தி­யாவில் இருக்­கக்­கூ­டிய இலங்கை அக­திகள் இலங்­கைக்கு மீளவும் வருகை தர­வேண்டும். அதற்­கான வழி­வ­கை­களை இந்­திய அர­சாங்கம் செய்­ய­வேண்டும் என்றும் சம்­பந்தன் எடுத்­து­ரைத்­துள்ளார்.

இந்த சந்­திப்பில் கருத்­து­ரைத்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்:

 கடந்­த­முறை உங்­க­ளது இலங்கை விஜ­யத்­தின்­போது உங்­களை மலை­ய­கத்­திற்கு அழைத்து சென்று நுவ­ரெ­லி­யாவில் எங்­க­ளது கூட்­ட­ணி­யினால் மாபெரும் கூட்­டத்தை நடத்­தி­யி­ருந்தோம். அதனை தற்­போது நான் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். முதன் முத­லாக இந்­தியப் பிர­தமர் ஒருவர் இலங்­கைக்கு வந்து நேர­டி­யாக மக்­களை சந்­தித்து பொதுக்­கூட்­டத்தில் உரை­யாற்றும் வாய்ப்பு அன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதை நீங்கள் மறந்­தி­ருக்­க­மாட்­டீர்கள் என நம்­பு­கின்றேன்.

 இலங்­கை­யில்­வா­ழக்­கூ­டிய இந்­திய வம்­சா­வளி மக்கள் மத்­தியில் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நல்­வாழ்வு கருதி நீங்கள் வீட்­டுத்­திட்­டத்­தினை விரை­வு­ப­டுத்­தி­யுள்­ளீர்கள். மேல­தி­க­மா­ன­வீ­டு­களை கட்­டித்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­துள்­ளீர்கள். அந்த உறு­தி­மொ­ழிகள் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அதற்­காக உங்­க­ளுக்கு நன்றி கூறு­கின்றேன்.

அதையும் தாண்­டிய பல சமூக, பொரு­ளா­தார, கலா­சார வேலைத்­திட்­டங்­களை இந்த மக்கள் மத்­தியில் மலை­யக மக்கள் மத்­தி­யி­லேயே முன்­னெ­டுப்­ப­தற்கு இந்­திய அர­சாங்கம் இன்­னமும் அதி­க­மாக அக்­க­றை­காட்­ட­வேண்டும். அதேபோல் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்­பாக இன்று இந்த இடத்தில் சம்­பந்­தனும் டக்ளஸ் தேவா­னந்தா அவர்­களும் பல கோரிக்­கை­களை முன்­வைத்­தார்கள். அவர்­களின் கோரிக்­கை­க­ளுடன் நானும் உடன்­ப­டு­கின்றேன். எங்கள் அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பாட்டை முன்­னி­றுத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. இது அர­சாங்­கத்தின் செயற்­பா­டாக இல்­லாமல் முழு­நாட்டின் செற்­பா­டா­கவும் எதிர்க்­கட்­சி­களை உள்­ள­டக்கி முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்த முயற்சி நடை­பெற்று வரு­கின்­ற­வே­ளை­யி­லேயே இன்­றயை அர­சியல் அமைப்­புக்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள 13ஆவது திருத்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதனை மேலும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான செயற்­பாட்டை இந்­திய அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்டும்.

அதற்­கான அழுத்­தங்­களை இந்­திய அர­சாங்கம் வழங்­க­வேண்டும். ஏனென்றால் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­றதும் ஏற்­க­னவே இருக்­கக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு என்­பதும் இரண்டு வெவ்­வேறு விட­யங்­க­ளாகும். ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் அதே­வே­ளையில் பழைய அர­சி­ய­ல­மைப்­புக்­குள்ளே இருக்­கக்­கூ­டிய 13ஆவது திருத்­தத்­ததை முன்­னெ­டுப்­பதும் அதனை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வதும் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்;

 இந்­தி­யாவின் கடன் உத­வித்­திட்­டத்தின் கீழே இலங்­கையில் ரயில் சேவை திட்­டங்­க­ளுக்­கான பாதைகள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. கிழக்கில் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து பொத்­து­வில்­வரை கிழக்கு கரை­யோ­ர­மாக ரயில்­பாதை அமைக்­கப்­ப­ட­வேண்டும். அதேபோல் வடக்­கிற்கு செல்லும் பாதை மன்னார், தலை­மன்னார் வரை புதுப்­பிக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை இந்­தியா மேற்­கொள்­ள­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.


இங்கு கருத்து தெரி­வித்த ஈ.பி.டி.பி.யின் செய­லா­ளரும், பார­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ்­தே­வா­னந்தா:

 13 ஆவது திருத்­தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். அதனை முழுமையாக அமுல்படுத்தினாலேயே தேசிய இனப்பிரச்சினையில் பெரும் பங்கு தீர்க்கப்படும். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், போன்றவற்றை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்யவேண்டும். பலாலியில் இருந்து தமிழ் நாட்டுக்கு விமான சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இந்தியாவிலிருக்ககூடிய பெருந்தொகையான இலங்கை பிரஜைகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு வழிவகைகளை இந்திய அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இலங்கை அகதிகளை மீளத் திரும்புவதற்கு முழுமையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கருத்து நிலவுகின்றது. அதனைத் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வழிஏற்படுத்த வேண்டும் என்று எடுத்துக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad