வடக்கில் உட்கட்டமைப்புக்கு பல கோடி ரூபா செலவு! பட்டியலிடுகிறார் சுவாமிநாதன்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, September 2, 2018

வடக்கில் உட்கட்டமைப்புக்கு பல கோடி ரூபா செலவு! பட்டியலிடுகிறார் சுவாமிநாதன்!!

அண்மைக் காலங்களில் காழ்ப்புணர்வு கொண்ட சிலரினால் உண்மைக்குப் புறம்பான முறையில் எமது அமைச்சின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. வீடமைப்பாக இருக்கட்டும், சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்வதாக இருக்கட்டும், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு அத்துடன் அடிப்படை வசதிகளாக இருக்கட்டும் இவையனைத்தும் பல கோடி ரூபா நிதியீட்டில் கடந்த மூன்று வருடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.படையினரிடமிருந்து 6009.95ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் . பிரதான நகரங்களில் உள்ள படையினரின் தலைமையகங்களை மாற்றுவதற்கு 866.71மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அமைச்சர் இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில் ,,

யாழ். மாவட்டத்தில் மானிப்பாய், சங்கானை ஆகிய இரு பகுதிகளிலும் இரு சந்தைக் கட்டிடங்கள் 110மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்களது பிரயோகத்திற்காக விடப்படவுள்ளது. கிளிநொச்சியில் தீக்கிரையான சந்தைக் கட்டடத் தொகுதியினைத் துரிதமாகப் புனரமைத்துக் கொடுத்ததுடன் மீண்டும் அத்தகைய அனர்த்தங்கள் நிகழ வாய்ப்பளிக்கா வண்ணம் தீயணைப்பு நிலையத்தினை அமைத்ததுடன் இயந்திரங்களையும் எனது அமைச்சானது வழங்கியுள்ளது.

இதற்காக ரூபா 97மில்லியனும் இச்சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான 122பேருக்கு இழப்பீட்டினை வழங்குதற்காக ரூபா 74மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தைக் கட்டடத்தினை ஸ்தாபிப்பதற்கான 767மில்லியன் ரூபா செலவு மதிப்பீட்டுடனான அமைச்சரவைப் பத்திரமொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாங்குள நகரினை அபிவிருத்தி செய்ததுடன் கைத்தொழிற் பேட்டையொன்றினையும் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறது. இதனைப் பூரணப்படுத்துவதற்காக மொத்தமாக 500மில்லியன் ரூபா அமைச்சினால் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வருடம் இழப்பீடுகளை வழங்குவதற்காக ரூபா 80கோடியும் கடன் உதவிகளை வழங்கும் பொருட்டு 40கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும், புதிய வீடமைப்புக்காக 141.7மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதோடு 17576பயனாளிகள் பயடைந்துள்ளனர். இடம்பெயர்ந்து காணியற்ற குடும்பங்களுக்காக கொள்வனவு செய்யப்பட்டு 20பேர்வீதம் வழங்கும் செயற்பாட்டிற்காக ரூபா 52.91மில்லியன் செலவிடப்பட்டுள்ளதோடு 156பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். அத்துடன் படையினரிடமிருந்து 6009.95ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதோடு விடுவிக்கப்பட்ட காணிகளில் இதுவரையில் 2570குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

கேப்பாபுலவில் 153மில்லியன் ரூபா செலவில் 470ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு 60ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 325.29ஏக்கரில் காணப்பட்ட பிரதான நகரங்களிலுள்ள படையினரின் தலைமையகங்களை இடம் மாற்றும் நடவடிக்கைகளுக்காக 866.71மில்லியன் செலவிடப்பட்டுள்ளதோடு 3147குடும்பங்களின் சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக 638மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக 3770மில்லியனும், வாழ்வாதார உதவிகளுக்காக ரூ 1928மில்லியனும், மீன்பிடித்துறைசார்ந்த வாழ்வாதார உதவிகளுக்காக ரூ 30மில்லியனும், 226 குளங்களை மீளமைத்தலுக்கு ரூ 458மில்லியனும், 8663பேருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக ரூ711.9மில்லியனும், 4509 அரச ஊழியர்களுக்கான நட்டஈட்டினை வழங்குவதற்காக ரூ535.7மில்லியனும், 9757 பொது மக்களுக்கான சொத்து இழப்பீட்டுக்காக ரூ840.2மில்லியனும், 1297 வணக்க தலங்களை புனரமைப்பதற்காக ரூ208.4மில்லியனும், 1029பேருக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான இலகு கடன்களுக்காக ரூ 182.6மில்லியனும், 962முன்னாள் போராளிகளுக்கான இலகு கடன்களை வழங்குவதற்காக ரூ 207.3மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 1800கோவில்களை புனரமைப்பதற்கு ரூபா 300மில்லியனும், 2000 அறநெறிபாடசாலைகளுக்காக ரூ 140மில்லியனும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் இழப்பீடுகளை வழங்குவதற்காக ரூ 80கோடியும் கடன் உதவிகளை வழங்கவதற்காக ரூ 40கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

;.

No comments:

Post a Comment

Post Bottom Ad