ஐ.நா. விவகாரங்களை முன்னெடுக்க தமிழ் மக்கள் பேரவையில் 10 பேர் கொண்ட குழு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, September 2, 2018

ஐ.நா. விவகாரங்களை முன்னெடுக்க தமிழ் மக்கள் பேரவையில் 10 பேர் கொண்ட குழு!!

இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, பாதுகாப்புச்சபை உள்ளிட்டவற்றின் அதிதீவிரமான கவனத்திற்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பத்துப்பேர் கொண்ட குழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தொடரின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச்சட்டங்கள் தொடர்பான விடயங்கள் அண்மைக்காலமாக நலிவுற்றுச் செல்கின்றமை தொடர்பாக

ஜ.நா. விவகாரங்களை கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயங்கள் குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிலிருந்து விலகிச் செல்லாதிருப்பதற்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெறும் வகையிலுமான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றமை தொடர்பில் பேரவையின் அங்கத்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் புலம்பெயர் அமைப்புக்களை ஒருங்கமைத்து மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து மற்றொரு தீர்மானத்தினை எந்த நாட்டின் ஊடாக கொண்டுவரச்செய்வது அதற்கான காய்நகர்த்தல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதேநேரம் பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனும் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயத்தினை ஆராய்ந்து அடுத்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பதற்கான பத்துப்பேர் கொண்ட குழு அமைப்பதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதற்கு அமைவாக, அருட்தந்தையர்களான ரவிச்சந்திரன், சக்திவேல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குருபரன், சட்டத்தரணிகளான விஜயகுமார், இரத்தினவேல், பேராசிரியர் சுவர்ணராஜா, சிவநாதன் உள்ளிட்டவர்கள் அக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

இக்குழு எதிர்வரும் காலத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அதன் பிரகாரம் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு அக்குழுவானது சந்திப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளையும் கையாளவுள்ளதாகவும் தெரியவரு கின்றது. .

No comments:

Post a Comment

Post Bottom Ad