நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, October 22, 2018

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!!

தமிழ் தேசியத்தை கொழும்பில் அடகு வைத்த ராஜாக்கள்

முதலமைச்சர் பதவில் விக்னேஸ்வரன் ஐயாவை முன் நிறுத்தியது பாவம் என சொல்லியுள்ளீர்கள்.

உங்கள் பரிதாப நிலையை எம்மால் தாங்க முடியவில்லை ராஜா

 முதலமைச்சர் பதவி மீது கண் வைத்திருக்கும் நீங்கள் இப்படி பேசுவது வெக்கம் இல்லையா?

2009 களுக்கு பின்னர் மட்டும் நீங்கள் செய்த பாவங்களை பட்டியல் இட விரும்புகிறேன்

குறைந்த பட்சம் ஒன்றை மறுத்துவிடுங்கள் பார்க்கலாம் 

1. சுமந்திரன் சர்வதேச போர்குற்றவிசாரணை முடிந்து விட்டது  என பொய் சொன்ன பொது நீங்கள் அமைதியாக இருந்தது பாவம் இல்லையா?

2. பகிரப்படாத இறைமை என்கிற ஒற்றையாட்சியின் பிரதான பண்பு கொண்ட இடைக்கால அரசியல் அமைப்பை சுமந்திரன் சமஸ்டி என வடக்கில் பிராச்சரம் செய்த பொது அவரோடு சேர்ந்து பொய் சொல்லி அப்பாவிகளை ஏமாற்றியது பாவம் இல்லையா ?

3. காலத்துக்கு காலம் போராட்டம் வெடிக்கும் என பொய் சொல்லி கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் மக்களை ஏமாற்றியது எத்தனை தரம் என்பது நினைவு இருக்கிறதா ? ..இது பாவம் இல்லையா ?

4. சம்பந்தன் சிங்க கொடியை பிடித்து ஆட்டிய பொது நீங்கள் மன்னிப்பு கேட்டதும் சம்பந்தன் காளி அம்மனின் கொடி என வசனம் பேசியதும் உங்களுக்கு வெட்கமாக இருக்க வில்லையா 

5. சம்பந்தன் சுமந்திரன் அமைச்சர்களுக்கு நிகராக சுதந்திர தினத்தில் பங்குபெற நீங்களும் உங்கள் சகாக்களும் வடக்கில் துக்க தினம் அனுஷ்டித்து மக்களுக்கு நாடகமாடியது பாவம் இல்லையா ?

5. கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தில் அங்கம் பெறுகிறீர்கள் ..அரசாங்க அமைச்சர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்கிறது .நிதி ஒதுக்கீடுகளை பெறுகிறீர்கள் . இது வரை மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் இருப்பது பாவம் இல்லையா ?

6. காணாமல் போனோர் பிரச்சனைகளை  அரசாங்கத்தின் பக்கம் நின்று ஒன்றுக்கும் உதவாத  காணாமல் போனார் அணைக்குழுக்கு சார்பாக வாக்களித்து நீர்த்து போக செய்தது  பாவம் இல்லையா 

7. 2 கோடி காசு வாங்கி அரசாங்க பாதீடுக்கு ஆதரவாக வாக்களித்தது பாவம் இல்லையா ..இந்த காசில் செய்த ஒரு நிலைத்திருக்கும் அபிவிருத்தி திட்டம் ஒன்றை சொல்ல முடியுமா ? 

8.புதிய பயங்கரவாத சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக சுமந்திரன் சொல்லுகிறார் .நீங்கள் கட்சி தலைவராக அமைதியாக இருக்கிறீர்கள் ..இது பாவம் இல்லையா ?

9. கிராமிய எழுச்சி நிதி ஒதுக்கீடுகளின் கீழ் அரசாங்க ஒதுக்கீடுகளை பெற்று உங்கள் தொகுதிகளில் மட்டும் 90 மில்லியன் காசை செலவு செய்கிறீர்கள் .மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் என்கிற ரீதியில்  தேவை பகுப்பாய்வு செய்து மாவட்ட ரீதியாக செலவு செய்ய வேண்டிய பணத்தை தேர்தல்  ஆதாயத்தை முன் வைத்து  உங்கள் தொகுதியில் முடக்குவது பாவம் இல்லையா ? அதுவும் விளையாட்டுக்கழகம் , சனசமூக நிலையம் என காசை செலவு செய்கிறீர்கள் . தீவகம் , வடமராட்சி கிழக்கு , நல்லூர் , யாழ்ப்பாண தொகுதிகளுக்கு நீங்கள் பெற்று கொடுத்த ஒரு அபிவிருத்தி திட்டம் சொல்லுங்கள் ? 

10. இன்றைக்கு வன வள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் , மகாவலி அதிகார சபை என  அரசாங்கம் மக்கள் காணிகளை அபகரிக்கிறது ..இது தொடர்பில உங்கள் சகாக்கள் சகிதம் பாராளமன்றத்தில்  பேசி தீர்வு பெற்று கொடுத்து இருக்கிறீர்களா / இது பாவம் இல்லையா ?

11.மகாவலி எல் வலயத்தின் கீழ் நடை பெரும் சிங்கள குடியேற்றங்கள் , புத்த விகாரைகள் என  ஒன்றை கூட தடுக்க முடியாமல் அரசாங்கத்தில் அங்கம் பெறுகிறீர்கள் ..இது பாவம் இல்லையா 

12. முல்லைத்தீவில் 4000 க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் ஆமியிடம் இருக்கிறது ..ஆனால் அரசாங்கம் 80 % விடுவித்ததாக அரசாங்கம் சொல்லுகிறது ..உங்கள் தரப்பில் ஒருவரும் இன்னும் வாய் திறக்கவில்லை ..இது பாவம் இல்லையா 

13. சிங்கள ஊழியர்களை கொண்டு வடக்கு கிழக்கு மாகாண அரச பணி வெற்றிடங்களை நிரப்புகிறார்கள்..எப்பையாவது  பேசி இருக்கிறீர்களா ..இது பாவம் இல்லையா 

14. வடக்கு கிழக்கு மீன் வளங்களை அரச ஆதரவில் தென்னிலங்கை மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் .. நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் ..இது பாவம் இல்லையா 

15. நீங்கள் அரசியல் கைதிகள் விடுவிக்காவிட்டால் ஆதரவு இல்லை  என சொல்லுகிறீர்கள் ..சுமந்திரன் இன்னும் முடிவு இல்லை என்கிறார் ..சம்பந்தன் அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் ..ஒரு கட்சி தலைவராக இது பாவம் இல்லையா 

16. மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட காசில் 50 % அதிகமான நிதியை அரசாங்கம் விடுவிக்க வில்லை . முதலமைச்சர் நிதியத்தை அரசு அங்கீகரிக்க வில்லை . ஏன் மாகாண அரசின் திட்டமான அம்மாச்சி உணவகத்திற்கு கூட பெயர் வைக்க விடவில்லை . இது பற்றி எல்லாம் பேசி இருக்கிறீர்களா ? இது பாவம் இல்லையா 

17. இனப்படுகொலை நடந்ததும் ஆதாரம் இல்லை என சுமந்திரன் சொல்லுகிறார் ..நீங்கள் இந்த 10 ஆண்டுகளில் எதையவது ஒரு ஆதாரம் தேட முயற்சித்தது உண்டா / இது பாவம் இல்லையா ?

18. திரு கோணேஸ்வரன் , கேதீஸ்வரன் , வெந்நீர் ஊற்று என பல முக்கிய இடங்கள் பறி போய் கொண்டு இருக்கிறது . நேற்று கேதீஸ்வர கோவிலில் உள்ள தென்னம் தோட்டத்திற்கு உரம் போடா தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்க வில்லை .. நீங்கள் அரசாங்க  சகபாடிகள் .. இது பாவம் இல்லையா  

19. வவுனியா பொருளாதார வலயத்தை அமைக்க முதலமைச்சர் முயன்ற பொது உங்கள் கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி அதை குழப்பியது பாவம் இல்லையா 

20 ..இதுவரை ஒரு நீண்ட கால மத்திய மற்றும் குறிகிய கால பொருளாதார திட்டங்களை வரைந்து இருக்கிறீர்களா ? இது எல்லாம் பாவம் இல்லையா 

21.சுமந்திரன் சகாக்களை கொண்டு மாகாணசபையை குழப்ப ஹோட்டல்களில் ரகசிய கூட்டம் போட்டு கொடூரங்கள் செய்து நம்பிக்கை இல்லா பிரேரணை எல்லாம் கொண்டு வந்த பொது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ..இது பாவம் இல்லையா ?

22. உங்களை அம்பலப்படுத்தியத்தை தவிர விக்னேஸ்வரன் செய்த பாவம் என்ன ? தெளிவாக பேச முடியுமா ? 

.இலங்கை தேசிய பிரச்னைகளில் பிரதான எதிர்க்கட்சியாக என்ன  செய்தீர்கள்  
1. பிணை முறி பிரச்சனை 
2. அம்பாந்தோட்டை துறைமுகம் , விமானத்தளம் பிரச்சனைகள் 
3. சைட்டம் 
4. சிங்கப்பூர் மற்றும் இந்தியா உடன்பாடுகள் 
5. நம்பிக்கை இல்ல பிரேரணை 
6. விலைவாசி, எரிபொருள் விலை

எதில்  நேர்மையான எதிர்க்கட்சியாக / இலங்கை மக்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டு இருக்கிறீர்கள்..இது எல்லாம் பாவம் இல்லையா ? 

இன்னும் வரும்



பதிவர் - தாயகவிடியல்

No comments:

Post a Comment

Post Bottom Ad